Tamilnadu
தேங்காய் மதிப்பு கூட்டுதல் மற்றும் பொருட்கள் தயாரித்தல்... 3 நாட்கள் பயிற்சி... எங்கு? எப்போது?
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், மூலிகை தேங்காய் மதிப்பு கூட்டுதல் மற்றும் பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி வரும் 10.02.2026 முதல் 12.02.2026 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் தேங்காய் எண்ணெய் தயாரித்தல், தேங்காய் சாஸ், தேங்காய் எலுமிச்சை சாறு, உலர்த்திய தேங்காய், தேங்காய் மாவு, தேங்காய் அரிசி / இட்லி தூள், தேங்காய் பால் கேஃபிர், தேங்காய் வேர்க்கடலை, குக்கீகள், தேங்காய் சிப்ஸ் (இனிப்பு), தேங்காய் மிட்டாய், தேங்காய் சாக்லேட், VCO - அடிப்படையிலான மசாஜ் எண்ணெய்கள், VCO - அடிப்படையிலான முடி வளர்ச்சி மற்றும் பொடுகு எதிர்ப்பு எண்ணெய்கள், வாத நோய் மற்றும் தசை வலி நிவாரணத்திற்கான VCO - அடிப்படையிலான எண்ணெய், VCO - அடிப்படையிலான ஈரப்பதம் ஜெல், VCO - அடிப்படையிலான முக தோல் பராமரிப்பு சீரம், VCO - அடிப்படையிலான மூலிகை உதடு தைலம்(ஜெல்), VCO - அடிப்படையிலான வலி மற்றும் சுவாச தைலம் தயாரித்தல் மற்றும் பயிற்சி வழிமுறைகளுடன் சுயமாக தொழில் தொடங்குவதற்கு இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இப்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்.
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை– 600 032.
8668102600 / 87544 95254
www.editn.in
முன்பதிவு அவசியம்:
அரசு சான்றிதழ் வழங்கப்படும்
Also Read
-
மாணாக்கர்களின் கல்விக்காக... அரசு கல்லூரிகளில் 426 கௌரவ விரிவுரையாளர்கள்.. - அமைச்சர் கோவி.செழியன் தகவல்!
-
Epstein Files... மோடியால் இந்தியாவுக்கு ஏற்படப்போகும் நிலைமை என்ன? - புட்டு புட்டு வைத்த அமைச்சர் ரகுபதி!
-
கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!
-
திராவிட மாடலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை! - முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் பாஜக வஞ்சிக்கிறது!” : முதலமைச்சர் உரை!