Tamilnadu

‘தி.மு.க தேர்தல் அறிக்கை’ தயாரிப்பு குழுவின் சுற்றுப்பயணம்! : எங்கு? எப்போது?

தி.மு.க தலைமைக் கழகம் சார்பில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ‘தி.மு.க தேர்தல் அறிக்கை’ தயாரிப்பு குழுவின் சுற்றுப்பயணம் குறித்த முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு,

பத்தாண்டுகாலம் இருண்டு கிடந்த தமிழ்நாட்டை மீட்டெடுத்து, எல்லோர்க்கும் எல்லாம் என் ஒளிமயமான பாதையில் பயணிக்கச்செய்திருக்கும் திராவிட மாடல் அரசு கடந்த தேர்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில் 404-க்கும் அதிகமானவற்றை நிறைவேற்றி, சொன்னதைச் செய்த அரசாக, சொல்லாததையும் செய்த அரசாக மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது.

சாதனைகளின் தொடர்ச்சியாக, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான வளர்ச்சியைத் திட்டமிட 'திராவிட மாடல் 2.0' தயாராகி வருகிறது. இந்த புதிய பயணத்திற்கான தேர்தல் அறிக்கை என்பது வெறும் காகிதமல்ல; அது மக்களின் குரலாக இருக்க வேண்டும் என்ற கழகத் தலைவர் அவர்களின் விருப்பத்தின்படி, ஒவ்வொரு தமிழ்நாட்டு குடிமகனின் தேவையையும் பிரதிபலிக்கும் வகையில், மக்கள் பங்கேற்புடன்கூடிய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் அறிக்கையை உருவாக்க கழகத் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு தயாராகி வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டலின்படி, 2026 சட்டப் பேரவை தேர்தலுக்கான தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஜனவரி 19 ஆம் தேதி தொடங்கி தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் டி.கே.எஸ்.இளங்கோவன், கோவி.செழியன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி. ராஜா, எம்.எம். அப்துல்லா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எழிலன் நாகநாதன், கார்த்திகேய சிவசேனாபதி, ஆ.தமிழரசி ரவிக்குமார், ஜி.சந்தானம் ஐ.ஏ.எஸ், சுரேஷ் சம்பந்தம் ஆகிய 12 அடங்கிய குழு பயணம் செய்து பொதுமக்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளைக் கேட்கவிருக்கிறது.

கீழே குறிப்பிட்டுள்ளவாறு மாவட்டக் கழகச்செயலாளர்கள் தேர்தல் அறிக்கைக் குழுவினருடன்தொடர்பு கொண்டு தங்கள் மாவட்டத்தைச் சார்ந்த வணிகர் சங்கங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள், நெசவாளர்கள், மீனவ சங்கங்கள், தொழிற்சங்கங்கள், தொழில் முனைவோர், மாணவர் சங்கங்கள், கல்வியாளர்கள், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் அழைத்து வந்து தி.மு.க தேர்தல் அறிக்கைக் தயாரிப்புக்குழுவினரைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Also Read: “பழசை பழனிசாமி மறந்திருக்கலாம்! அரசு ஊழியர்கள் மறக்க மாட்டார்கள்!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!