Tamilnadu
விறுவிறுப்பாக தயாராகும் தி.மு.க தேர்தல் அறிக்கை! : 4 நாட்களில் 52,080 பரிந்துரைகள் தெரிவித்த பொதுமக்கள்!
தமிழ்நாட்டில் உரிமைகளை நிலைநாட்டி, மக்கள் நலனைப் பேணும் கூட்டணி ஒரு புறமும்; உரிமைகளை சூறையாடி டெல்லிக்கு அடிமையாக தமிழ்நாட்டை மாற்றத் துடிக்கும் சந்தர்ப்பவாத கூட்டணி மறுபுறமும் 2026 தேர்தலை எதிர்நோக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இவ்வேளையில், சந்தர்ப்பவாத கூட்டணிக்கு இடம்தர விரும்பாத தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு தி.மு.க கூட்டணிக்கே பெரும்பான்மையாக இருக்கிறது என்பதை அவ்வப்போது சந்தர்ப்பவாத கூட்டணியில் இருப்பவர்களும் மறுக்க தயங்குவதில்லை.
இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தி.மு.க தேர்தல் அறிக்கை மும்முரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவிற்கு தலைமை தாங்கியுள்ள கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை, மக்கள் விரும்பும் அறிக்கையாக தயாரிக்க முழு மூச்சில் செயல்பட்டு வருகிறார்.
அதற்காக கடந்த ஜன.3 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பொதுமக்களின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் பெறும் வகையிலான அலைபேசி எண், வலைதள விவரம், சமூக வலைதள தொடர்புகள், செயற்கை நுண்ணறிவு வலைவாசல் (portal) ஆகியவற்றை அறிமுகம் செய்து வைத்தார்.
அதன் அடிப்படையில் கடந்த 4 நாட்களில் (ஜன.6 மாலை 6.30 வரை) பொதுமக்களிடம் இருந்து சுமார் 52 ஆயிரம் பரிந்துரைகளும், கோரிக்கைகளும் பெறப்பட்டுள்ளன.
தொலைபேசி வழியாக: 6,598
வாட்ஸப் வழியாக : 29,036
மின்னஞ்சல் வழியாக : 1046
இணையதளம் வழியாக: 8266
QR scan வழியாக: 1394
AI வலைவாசல் வழியாக: 5680
என இதுவரை மொத்தம் 52,080 பரிந்துரைகளும், கோரிக்கைகளும் பெறப்பற்றுள்ளன.
மேலும், பொதுமக்கள் தங்களது பரிந்துரைகளை தெரிவிக்க,
தொலைபேசி: 08069446900
வாட்ஸ்அப் (WhatsApp): 9384001724
மின்னஞ்சல்: dmkmanifesto2026@dmk.in
இணையதளம்: www.dmk.in/ta/resources/manifesto_2026
சமூக வலைத்தளங்கள்: dmkmanifesto26
செயற்கை நுண்ணறிவுத் தளம்: tnmanifesto.ai
ஆகிய முகவரிகளை தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
திருப்பரங்குன்றம் விவகாரம் : ‘‘பியூஷ் கோயலின் ‘பியூஸ்’ போன வாதங்கள்...” - முரசொலி தலையங்கம்!
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!