Tamilnadu

மூளையை தின்னும் அமீபா வைரஸ் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!

சேலம் மாவட்டம், செவ்வாய்பேட்டையிலிருந்து ரூ.8.60 கோடி மதிப்பீட்டில் 17 புதிய மருத்துவக் கட்டடங்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் இராஜேந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்” கேரளாவில் பரவி வருவதாக கூறப்படும் அமீபா வைரஸ் என்பது தொற்றுநோய் அல்ல. நீண்ட நாட்கள் தேங்கியுள்ள குளம் மற்றும் குட்டை உள்ளிட்ட நீர் நிலைகளில் குளிப்பதினால் அந்த நீரில் தேங்கியுள்ள வைரஸ் மனிதனின் மூக்கின் வழியாக மூளையை சென்று உயிரைழைப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

நீண்ட நாட்கள் தேங்கியுள்ள நேரில் குளிப்பதால் மட்டுமே இது போன்ற பாதிப்பு வர வாய்ப்பு உள்ளது. ஓடும் நேரில் குளிப்பதால் எந்த பிரச்சினையும் இல்லை. எனவே தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு செல்லக்கூடிய பக்தர்கள் அமீபா வைரஸ் அச்சப்படத் தேவையில்லை.

கேரளா மட்டுமல்ல தமிழ்நாட்டில் கூட நீண்ட நாட்கள் தேங்கியிருக்கும் குளம் குட்டைகள் மற்றும் பராமரிப்பு இல்லாத நீச்சல் குளங்கள் போன்றவற்றில் குளிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: வேளாண் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது ? : செல்வப்பெருந்தகை கேள்வி!