Tamilnadu

“கோட்டத்தையே கொண்டாட்டமாக மாற்றிய அறிவுத்திருவிழா!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

திராவிட முன்னேற்றக்கழகம் தொடர்ந்து அறிவுச்செயல்பாடுகளை முன்னெடுக்கும் இயக்கம் என்பது அனைவராலும் அறியப்பட்டதே.

அந்த வகையில், தி.மு.கழகத்தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75– ஆண்டு நிறைவை முன்னிட்டு, கழக இளைஞர் அணி ‘தி.மு.க 75 அறிவுத்திருவிழா’ என்னும் மாபெரும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தி.மு.க இளைஞர் அணி முன்னெடுத்த ‘தி.மு.க 75 – அறிவுத்திருவிழா’ என்னும் மகத்தான நிகழ்ச்சியை நவ.08 அன்று கழகத்தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வின் தொடக்க நாளில் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூல் வெளியிடப்பட்டு, ‘இருவண்ணக்கொடிக்கு வயது 75’ தலைப்பிலான கருத்தரங்கங்கள் நடைபெற்றன. மேலும் ஒருவார காலம் நடைபெற்ற ‘முற்போக்கு புத்தகக்காட்சி’யையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவ.08 அன்று தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், புத்தகக்காட்சியின் நிறைவு நாளான இன்று (நவ.16) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்து சுமார் 2 மணிநேரம் செலவிட்டு, பல புத்தகங்களை வாங்கி சென்றார்.

இது குறித்து கழக இளைஞரணி செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தது பின்வருமாறு,

“வள்ளுவர் கோட்டத்தில், கடந்தவாரம் திமுக 75 அறிவுத்திருவிழா-வைத் தொடங்கி வைத்த கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அதன் நிறைவு நாளான இன்று சென்னை முற்போக்கு புத்தகக் காட்சிக்கு வருகை தந்தார்.

கழக இளைஞர் அணியின் முத்தமிழறிஞர் பதிப்பகம் உள்ளிட்ட முற்போக்கு அரசியல் நூல்களைப் பதிப்பிக்கும் பதிப்பகங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ள இந்தப் புத்தக காட்சியில், அமைந்துள்ள ஒவ்வொரு அரங்காக சென்று, 2 மணி நேரத்திற்கு மேல் செலவிட்டு, தேர்ந்தெடுத்து நிறைய புத்தகங்களை, தன் நூலகத்திற்காக வாங்கினார்.

ஒருவார காலம் மிக சிறப்பான வரவேற்புடன் கோட்டத்தையே கொண்டாட்டமாக மாற்றி இருக்கும் இந்த அறிவுத்திருவிழா, தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வருகையால், மேலும் உற்சாகம் பெற்றுள்ளது.”

Also Read: SIR : போராட்டம்.. தற்கொலை.. BLO அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் வேலைப்பளு கொடுப்பதால் நேரும் கதி!