Tamilnadu

KGF நடிகர் திடீர் மரணம் : சக நடிகர்கள் இரங்கல்!

கன்னட திரையுலகில் 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் KGF. யாஷ் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான இப்படம், இந்திய அளவில் பெரிய சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து 2021-ம் ஆண்டு KGF படத்தின் 2-ம் பாகம் வெளியானது. இந்த படமும் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக பெரும் சாதனையை படைத்தது.

இப்படத்தில், சச்சா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் ஹரிஷ் ராய் நடித்து இருந்தார். மேலும் இவர் ஓம் திரைப்படத்திலும் நடத்து கவனம் பெற்று இருப்பார். இதற்கிடையில் தைராய்டு புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஹரிஷ் ராய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மேலும், மருத்துவ செலவுகளுக்கு பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இவருக்கு நிதி உதவி வேண்டும் என கோரி சமூகவலைதளங்களில் வீடியோவும் வெளியானது. அதில் ஒரு ஊசிக்கு மட்டும் ரூ.3 லட்சம் செலவாகிறது என வேதனையுடன் ஹரிய் ராய் கூறியிருந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த KGF சச்சா என்கிற ஹரிஷ் ராய் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது மறைவுக்கு சக நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: KGF நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்டம்: கட்அவுட் வைத்த ரசிகர்கள் மீது பாய்ந்த மின்சாரம் - 3 பேர் பரிதாப பலி!