Tamilnadu

”தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் ஜப்பான் தரத்துக்கு இணையானது” : டி.ஆர்.பி ராஜா பெருமிதம்!

இந்தியாவின் மின்சார வாகனத் தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது. நாட்டில் விற்பனையாகும் மின்சார வாகனங்களில் 70% தமிழ்நாட்டில்தான் தயாரிக்கப்படுகிறது. திராவிட மாடல் அரசின் கொள்கைகளால்தான் இது சாத்தியமாகியுள்ளது என அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

சென்னை, கிண்டியில் நடந்த ஆட்டோமொபைல் விற்பனையாளர்கள் கருத்தரங்களில் பங்கேற்று பேசிய அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, ” இந்தியாவில் தயாராகும் வாகன உதிரிபாகங்களில் 42% தமிழ்நாட்டில் இருந்து தயாராகிறது. இந்தியாவின் வாகன உதிரிபாகத் துறை தமிழ்நாட்டை சார்ந்துள்ளது என்று நாம் பெருமையுடன் சொல்லலாம். தமிழ்நாட்டில் தயாராகும் பொருட்கள் ஜப்பான் தரத்துக்கு இணையானது.

இந்தியாவின் மின்சார வாகனத் தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது. நாட்டில் விற்பனையாகும் மின்சார வாகனங்களில் 70% தமிழ்நாட்டில்தான் தயாரிக்கப்படுகிறது. திராவிட மாடல் அரசின் கொள்கைகளால்தான் இது சாத்தியமாகியுள்ளது.

தமிழ்நாடு முன்னேறினால் அதுவே இந்தியாவின் முன்னேற்றம். நாங்கள் 40,000 தொழிற்சாலைகள் கொண்டிருக்கிறோம், மகாராஷ்டிரா 28,000 தொழிற்சாலைகள் கொண்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் தற்போது இந்தியாவின் மின்னணு உற்பத்தித் தலைநகராக திகழ்கிறது. இங்கு தயாராகும் கார்கள் மிகுந்த தரத்துடன் உள்ளன, அவற்றின் 42 சதவீத உதிரிபாகங்கள் தமிழ்நாட்டில்தான் தயாரிக்கப்படுகின்றன.

ஜப்பானின் நிசான் மோட்டார்ஸ் நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து வேலைவாய்ப்பு பயிற்சிகள் நடத்தி, வேலை தேடுவோருக்கு திறன் பயிற்சி வழங்கி, அவர்களை ஜப்பான் போன்ற நாடுகளுக்குக் அனுப்பும் பணிகளை மேற்கொண்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

Also Read: பீகார் : 121 தொகுதிகளுக்கு நாளை முதல்கட்ட தேர்தல் - பதற்றமான தொகுதிகளில் துணை ராணுவ வீரர்கள்!