Tamilnadu

தமிழ்நாட்டை தண்டிப்பது ஏன்? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு 10 கேள்விகளை எழுப்பிய அமைச்சர் தங்கம் தென்னரசு!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத் தொடரில், மிகக்குறைவான நிதி பங்கீட்டை பெறும் மாநிலம் தமிழ்நாடுதான். பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மட்டும் பல மடங்கு நிதி வழங்கப்படுகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டினார்.

மேலும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு 10 கேள்விகளை அமைச்சர் தங்கம் தென்னரசு எழுப்பினார். அதன் விவரம் வருமாறு:-

1.மாநில அரசுகளை ஆலோசிக்காமல் ஜி.எஸ்.டி திருத்தம் செய்தது ஏன்?

2.கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்ததற்காக தமிழ்நாட்டை தண்டிப்பது ஏன்?

3.உ.பி, குஜராத், மகாராஷ்டிராவிற்கு அளிக்கப்படும் சாலை திட்டங்களை தமிழ்நாட்டிற்கு தருவதில்லை, ஏன்?

4.புதிய ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தென்னக இரயில்வேக்கு மட்டும் பாரபட்சம் ஏன்?

5.மதுரை & கோயம்புத்தூர் மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி தர தாமதம் ஏன்?

6.தமிழ்நாடு நிதியில் கட்டிய வீடுகளில் பிரதமர் பெயர் ஏன்?

7.கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரமான 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு வழங்கவேண்டிய நிதி 1975 கோடி எங்கே? ஓய்வூதிய திட்டத்திற்கு வெறும் ரூ.200 தருகிறீர்கள். ஆனால் தமிழ்நாடு அரசு ரூ.1,200 வழங்குகிறது.

8.நிதி தராமல் புரியாத மொழியில் பெயர் மட்டும் ஏன்?

9.தமிழ்நாடிற்கு சேர் வேண்டிய ஜல் ஜீவன் திட்ட நிதி ரூ.3,709 கோடி ஏன் இன்று வரை விடுவிக்கப்படவில்லை?

10.நாட்டின் மக்கள் தொகையில் தமிழ்நாடு 6%, ஆனால், 4% மட்டும் நிதிப் பகிர்வு அளிப்பது ஏன்?

Also Read: இரட்டை இலக்கை எட்டிய தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமை!