Tamilnadu

பிரபல கிரிக்கெட் வீரர் பெயரில் போலி Instagram கணக்கு : பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி - நடந்தது என்ன?

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் கீதா (38). இவர் கடந்த ஜூன் மாதம் இவரது இன்ஸ்டாகிராம் வலைதள கணக்கிற்கு தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் பெயரில் உள்ள கணக்கிலிருந்து நட்பு கோரிக்கை வந்துள்ளது.

இதையடுத்து, அவர் கணக்கை ஏற்றுக்கொண்டதை அடுத்து இருவரும் பேசி வந்துள்ளனர். பிறகு செல்போன் எண் பகிர்ந்து பேசி இருக்கிறார்கள். தன்னை தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் என அறிமுகப்படுத்தி கொண்டு, தனக்கு நிறைய செல்வாக்கு உள்ளது என கூறியுள்ளார்.

மேலும், உங்களுக்கு அரசு வேலை வாங்கி தரமுடியும் என்றும், அதற்கு Processing and Formalities செலவு ஆகும் என கூறி நம்ப வைத்ததின்பேரில், கீதா கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை பல தவணைகளாக ஜிபே மூலம் மொத்தம் ரூ.5,08,700 அனுப்பியுள்ளார்.

ஆனால் அந்த நபர் வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் அவர் மீது சந்தேகம் வந்த கீதா இது குறித்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகார் மீது விரைந்து விசாரணை மேற்கொண்டு போது, போலி இன்ஸ்டாகிராம் ஐடி உருவாக்கி அரசு வேலை வாங்கி தருவதாக கீதாவை ஏமாற்றியது ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராகுல் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ராகுல் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் அவரை வேலையிலிருந்து நீக்கிள்ளனர்.

மேலும் அவருக்கு திருமணமும் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இதனால் பிரபலங்கள் பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் ஐ.டி.க்கள் உருவாக்கி, மேற்படி புகார்தாரரை ஏமாற்றி பணத்தை பெற்று திருமணத்தை நடத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Also Read: பட்டியலின இளைஞர் கொலை : முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் - காங்கிரஸ்!