Tamilnadu
கோவை மாநகரில் ‘தமிழ்நாடு உலகளாவிய ஸ்டார்ட்அப் உச்சி மாநாட்டில் (TNGSS) 2025!’ : முதலமைச்சர் அழைப்பு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2025 அக்டோபர் 9,10 ஆகிய தேதிகளில் கோவை மாநகரில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு உலகப் புத்தொழில் மாநாடு குறித்து ஓர் ஆங்கில நாளிதழில் இன்று(3.10.2025) எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்.
ஓசூரில் அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு ரைசிங் இன்வெஸ்ட்மெண்ட் மாநாட்டில், டோரஸ் ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் இளம் நிறுவனர் ஒருவர் கையில் ஆவணங்களுடன் மேடையை நோக்கிச் சென்றார்.
தமிழ்நாடு அரசுடன் முதலீட்டுப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தருணம் அந்த நாளில் பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டாலும், டோரஸ் ரோபோடிக்ஸ் பயணம் மாறுபட்டதாக இருந்தது – அரசின் ஆதரவுடன் இன்க்யூபேஷன், சிரமமான பிரச்சினையை பொறுமையான வழிகாட்டுதலுடனும் எளிய விதைநிதி உதவியுடனும் சரி செய்தது.
அன்று காலை, அவர்கள் ஓசூரில் வாய்ப்புக்காகக் காத்திருந்து விண்ணப்பிப்பவர்கள் அல்ல. ரூ.100 கோடி முதலீட்டுடன் அரசின் முக்கிய கூட்டாளர்களாக மாறினர். டோரஸ் ரோபோடிக்ஸ் போன்ற புத்தாக்கத் தொழில்களை முதலீட்டாளர்களாக வரவேற்பது, நாங்கள் உருவாக்க நினைத்த அமைப்பின் அடையாளம்.
அரசு வளர்த்தெடுத்த ஒரு ஸ்டார்ட்அப், பின்னர் அரசின் பங்காளர்களாக உயர்வது. இது புதுமை மற்றும் இணைப்பு, கொள்கை மற்றும் நோக்கம் ஆகியவற்றை இணைக்கும் எங்கள் திட்டத்தின் திட்டமிட்ட விளைவாகும்.
புத்தாக்கத் தொழில்களின் வேகமான வளர்ச்சி
பல தசாப்தங்களாக, தமிழ்நாட்டின் தொழில்துறை அடையாளம் உற்பத்தித் திறனின் மேன்மையால் சிறப்பிடம் பெற்றிருந்தது. கடந்த நான்கு ஆண்டுகளில், அந்த வலிமையை அமைதியாகவும், நிலையான முறையிலும், நாங்கள் தீவிர தொழில்நுட்பம் மற்றும் புதுமைத் துறைகளுக்கு அனைவரையும் இணைத்து விரிவாக்கி வருகிறோம்.
எங்கள் அரசு பொறுப்பேற்றபோது, தமிழ்நாட்டில் தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறையில் [DPIIT - Department for Promotion of Industry and Internal Trade] 2,032 பதிவு செய்யப்பட்ட புத்தொழில்கள் இருந்தன. இன்று, அந்த எண்ணிக்கை 12,100-ஐ கடந்துள்ளது – வெறும் நான்கு ஆண்டுகளில் ஆறு மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது.
அதில் 50% பெண்கள் தலைமையிலானவை என்பது எங்களுக்கு பெருமை அளிக்கிறது. 2018-இல் "உயரும் மாநிலம்" என்று வகைப்படுத்தப்பட்ட தமிழ்நாடு, 2022-இல் ஒன்றிய அரசின் DPIIT வழங்கிய "சிறந்த மாநிலம்" விருதைப் பெற்றது.
மேலும், சார்வதேச ஸ்டார்ட்அப் எகோசிஸ்டம் அறிக்கை 2024-இல், சென்னை, ஆசியாவில் 18வது இடத்தையும், மிகக் குறைந்த செலவில் திறமையான மனிதவளம் வழங்கும் ஆசியாவின் முதல் 10 நகரங்களில் ஒன்றாகவும் மதிப்பிடப்பட்டது.
தமிழ்நாடு, இந்தியாவில் மிக அதிகமான இன்க்யூபேட்டர்களைக் கொண்ட மாநிலம் என்றும், அட்டல் இனோவேஷன் மிஷன் எங்களைப் புதுமை அமைப்புக்கான மாதிரி மாநிலம் என்றும் அறிவித்துள்ளது.
இந்தச் சாதனைகள் அனைத்தும் மூன்று தூண்கள் கொண்ட எங்கள் அரசின் புத்தாக்கத் தொழில் வளர்ச்சித் திட்டத்தின் விளைவாகும்.
முதல் தூண் - அரசின் மூலதனத்தை ஊக்கமாகப் பயன்படுத்துவது
தமிழ்நாடு புத்தாக்க மூலதன நிதி (TANSEED) மூலம், புத்தாக்கத் தொழில்களுக்கு ரூபாய் 10 இலட்சம் விதை நிதியுதவியும், பெண்கள் முன்னிலையில் செயல்படும் நிறுவனங்கள், பசுமை தொழில்நுட்பம், மற்றும் கிராமப்புற வாழ்வாதார திட்டங்களுக்கு ரூபாய் 15 இலட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இதுவரை Ippopay, Gallabox, Dream Aerospace போன்ற 169 புத்தாக்கத் தொழில்களுக்கு ரூ.18.79 கோடி வழங்கப்பட்டுள்ளது. அவை ரூபாய் 537 கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்துள்ளன. அதாவது ஒரு ரூபாய்க்கு 28 மடங்கு வருமானம்.
நாங்கள் இந்த மூலதன ஆதரவை எதிர்கால முன்னணித் துறைகளுக்கும் விரிவாக்கி வருகிறோம். எடுத்துக்காட்டாக, தமிழ்நாடு விண்வெளி தொழில்நுட்ப நிதி (ரூபாய் 10 கோடி) மூலம், வெளிப்புற முதலீட்டாளர்களுடன் 1:1 விகிதத்தில் ரூபாய் 250 இலட்சம் வரை உதவி வழங்கப்படுகிறது. இது மைய மற்றும் தொடர்புடைய விண்வெளி தொழில்நுட்பங்களை வலுவாக ஆதரிக்கிறது.
செயற்கைக் கோள்களிலிருந்து செயற்கை நுண்ணறிவு (AI) இயக்கப்படும் புவியியல் தீர்வுகள் வரை உள்ள கீழ்நிலை விண்வெளி பயன்பாடுகளுக்கு நாங்கள் ஆதரவு அளித்து வருகிறோம்.
இரண்டாவது தூண் - இணைப்பு மற்றும் பாலின சமநிலை
இணைப்பை நாங்கள் தர்மமாக அல்ல, திட்டமிடப்பட்ட யுக்தியாகக் கருதுகிறோம். பட்டியலிடப்பட்ட சாதி மற்றும் பழங்குடியினர் (SC/ST) புத்தாக்கத் தொழில் நிதி, 2022-23 இல் ரூபாய் 30 கோடி முதலீட்டுடன் தொடங்கப்பட்டு, 2023-24-இல் ரூபாய் 150 கோடியாக உயர்த்தப்பட்டது. இது சம வாய்ப்பை உருவாக்கும் வகையில் ஈக்விட்டி முதலீடுகளை வழங்குகிறது.
OrbitAlkl, Unibose, TAMS Tribal Green Fuel போன்ற 43 புத்தாக்கத் தொழில்கள் இதுவரை ரூ.160.80 கோடி பெற்றுள்ளன. இதன் தொடர்ச்சியாக, சமூக நிறுவனங்களை ஆதரித்து, SC/ST தொழில் முனைவோர்களை வலுப்படுத்தும் "பெரியார் சமூகநீதி வெஞ்சர் லாப்" என்ற விரைவாக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். ஏற்கெனவே 30-க்கும் மேற்பட்ட புத்தாக்கத் தொழில்கள் இதில் ஈடுபட்டுள்ளன, அதில் 8 நிறுவனங்கள் ரூ. 16.9 கோடி அடுத்த கட்ட நிதியை வெற்றிகரமாக பெற்றுள்ளன.
பாலின சமநிலை குறித்த எங்கள் கவனம், தொழிலி பூட்காம்புகள் மூலம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், கன்னியாகுமரி, ஈரோடு, சென்னை போன்ற இடங்களில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சி பெற்றனர். அவர்களில் 15 பெண் தொழில் முனைவோர்கள் ரூ.14.70 லட்சம் இன்க்யூபேஷன் செலவுகளுக்காகப் பெற்றுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கும், திருநங்கைகளுக்கும் புத்தொழில்களுக்காக ரூ.5 இலட்சம் வரை சிறப்பு விதை நிதி வழங்கப்பட்டு, கட்டமைக்கப்பட்ட வழிகாட்டல் மற்றும் இன்க்யூபேஷன் அணுகல் வழங்கப்படுகிறது.
கிராமப்புற புதுமையாளர்களுக்காக “கிராமம் தோறும் புத்தொழில்” திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 100 கிராமங்களில் 100 ஸ்டார்ட்அப்கள் உருவாக்கப்படுவதே குறிக்கோள். இதற்காக ரூபாய் 1 இலட்சம் வரை TANSEED ஈக்விட்டி இல்லா நிதி மற்றும் பிராந்திய மையங்களின் மூலம் இன்க்யூபேஷன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மூன்றாவது தூண் – பரவலாக்கல் மூலம் இணைந்த சூழலை உருவாக்குவது
சென்னை, மதுரை, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், கடலூர், ஹோசூர், தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருச்சி போன்ற 10 பிராந்திய மையங்கள் வழியாக உள்கட்டமைப்பு, வழிகாட்டிகள் மற்றும் சந்தைகள் தொழில் முனைவோர்களுக்கு நெருக்கமாக கொண்டுவரப்பட்டுள்ளன. சென்னையில் ஒரு மெட்ரோ ஹப் செயல்படுகிறது, மேலும் தூத்துக்குடி அடுத்த மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆரம்ப நிலையில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க Tier-II/III/IV கல்லூரிகளில் 100 முன் இன்க்யூபேஷன் மையங்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றுள் முதல் 25 மையங்கள் ஒவ்வொன்றும் ரூபாய் 7.5 இலட்சம் (மொத்தம் ரூ.1.87 கோடி) செலவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
டிஜிட்டல் தளங்களின் பிணைப்பு
MentorTN தளத்தில் 320 வழிகாட்டிகள் மற்றும் 1,171 ஸ்டார்ட்அப்கள் இணைக்கப்பட்டு, இதுவரை 1,120 மணி நேர வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
TANFUND தளம் மூலம் 300-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் மற்றும் 2,500-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 221 முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்ச்சிகள், 1,417 ஸ்டார்ட்அப்-முதலீட்டாளர் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டு, மொத்தம் ரூ.127.09 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.
StartupTN, “நான் முதலவன்” திட்டத்தின் “நிரல் திருவிழா” ஹாக்கத்தான் நிகழ்ச்சியில் முக்கிய பங்களிப்பாளராக உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் உருவாக்கும் திட்டங்களை வணிக ரீதியாக வெற்றி பெறக்கூடிய ஸ்டார்ட்அப்களாக மாற்ற வழிகாட்டப்படுகிறது. கல்வி மற்றும் தொழில்முனைவு சூழல்களை இணைக்கும் இந்த ஒத்துழைப்பு, மாணவர்கள் எதிர்காலத் தொழில் முனைவோர்களாக வளரவைக்கிறது.
முதலீடு மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு அப்பால்
முதலீடு மற்றும் உள்கட்டமைப்பை மட்டுமின்றி, தடைகளைக் குறைத்து, தரத்தை உயர்த்தும் கருவிகளையும் நாங்கள் வழங்கியுள்ளோம்.
StartupTN Smart Card : ஆரம்பநிலை ஸ்டார்ட்அப்களுக்கு இன்றியமையாத சேவைகளை மானிய விலையில் பெற உதவி செய்கிறது. இதன் மூலம் பணத்தைச் சேமித்து, வேகமாக வளர முடிகிறது.
இருமொழி அழைப்பு மையம் (தமிழ் & ஆங்கிலம்) : முதல் முறையாக தொழில் தொடங்குபவர்கள் தகவல் பற்றாக்குறையால் திகைத்து விடாமல், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் வழிகாட்டுதலைப் பெறுகின்றனர்.
BrandLabs – ‘Nil-Brand-Sell’ பாடநெறி (250 நிமிடங்கள், தமிழ் & ஆங்கிலம்) : நல்ல தயாரிப்புகளை வலுவான பிராண்ட்களாக மாற்ற உதவுகிறது.
Corporate Innovation Initiative : Bosch, Kauvery Hospitals, Hero MotoCorp, PayU, Pierer Innovation, Daimler India Commercial Vehicles போன்ற முன்னணி நிறுவனங்களுடன் ஸ்டார்ட்அப்களை இணைத்து, உண்மையான சவால்களைத் தீர்க்கும் வாய்ப்புகளை உருவாக்குகிறது.
விளைவுகள் – அளவிடத்தக்கவை, தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டவை
கடந்த நான்கு ஆண்டுகளில் ஸ்லோகன்கள் அல்ல, முறைமைகள் மாறியுள்ளன.
StartupTN-ஐ மீள உயிர்ப்பித்தோம்.
அதை மாநிலம் முழுவதும் விரிவாக்கினோம்.
இணைப்பு மற்றும் சமத்துவத்தை வளர்ச்சியின் மையமாக மாற்றினோம்.
வழிகாட்டிகள், சந்தைகள், முதலீடுகள் ஆகியவற்றில் அனைவரும் சமமான அணுகுமுறை பெறும் வகையில் உறுதி செய்தோம்.
ஒருகாலத்தில் தங்கள் யோசனைகளை கைவிட்டவர்கள், இன்று அரசின் ஆதரவோடு ஒரு பாதையைக் காண்கிறார்கள்.
கீழ்மட்டத்திலிருந்து முன்னணிக்கு, தற்காலிக முயற்சிகளில் இருந்து நிலையான நிறுவனங்களுக்கு நம்மை மாற்றியமைத்தோம்.
நாங்கள் ஒரு வளரும் ஸ்டார்ட்அப் இயந்திரத்தைப் பெறவில்லை; அதை உருவாக்கினோம்.
கோயம்புத்தூரில் உலகளாவிய ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு
தமிழ்நாடு உலகளாவிய ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு (TNGSS) 2025 – கோயம்புத்தூரில் 2025 அக்டோபர் 9-10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இது எங்கள் முயற்சிகளில் ஒரு மைல்கல்.
30,000 பார்வையாளர்கள், 2,000 பிரதிநிதிகள், 750 கண்காட்சியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் சரியான கூட்டாளர்கள், முதலீட்டாளர்கள், அல்லது தேவையான ஆதாரங்களைத் தேட உதவும் வகையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படும் AI அடிப்படையிலான மேட்ச் மேக்கிங் செயலி பயன்பாட்டில் இருக்கும்.
பெண்கள் பங்கேற்பாளர்களுக்காக சிறப்பு வசதிகள் (feeding rooms, creche) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், மாநாடு அனைவருக்கும் இணைப்பு மிக்க சூழலை உருவாக்கும்.
35 நாடுகளிலிருந்து முதலீட்டாளர்கள், நிறுவனர், மாணவர்கள், உலகத் தலைவர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் ஸ்டார்ட்அப் கதையின் அடுத்த அத்தியாயத்தை வடிவமைக்க கைகோர்க்கிறார்கள்.
அறிவு & வாய்ப்புகள் திறக்கும் மேடைகள்
Google, Meta, Microsoft, Harvard Innovation Labs நடத்தும் மாஸ்டர்கிளாஸ்கள்
யூனிகார்ன் நிறுவனங்கள் மற்றும் முன்னணி தொழில் முனைவோர்களின் அனுபவப் பகிர்வுகள்
விண்வெளி தொழில்நுட்பம், கார்ப்பரேட் இனோவேஷன், பவர் பிராண்ட்கள், அரசு கூட்டாண்மைகள் ஆகியவற்றுக்கான தனிப்பட்ட அரங்குகள்.
இம்மாநாடு, தொழில் முனைவோர், முதலீட்டாளர், கொள்கை நிர்ணயிப்போர் அல்லது மாணவர் என்றாலும்கூட, தமிழ்நாடு உலகப் புத்தொழில் மாநாடு 2025 இல் உங்கள் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப வழிவகுக்கும் புதிய வாய்ப்புகள் வழங்கிடும் தளமாகத் திகழ்ந்திடும்.
கடந்த நான்கு ஆண்டுகளில் தொழில் வளர்ச்சியில் நாம் படைத்துள்ள சாதனைகளை மேலும் விரிவுபடுத்திட - தமிழ்நாட்டை புதுமைகள் படைத்திடும் தலைநகராக வளர்த்தெடுத்திட, புத்தாக்கத் தொழில் புரட்சியை உருவாக்கிடும் உன்னத நோக்கத்துடன் கோவை மாநகரில் உங்கள் அனைவரையும் வரவேற்கக் காத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்கள்.
Also Read
-
அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாக்கும் அரசு : பல்லுயிர் பாதுகாப்பில் சிறந்து விளக்கும் திராவிட மாடல் !
-
“தேசிய கைத்தறி கண்காட்சி 2025!” - 30% முதல் 50% வரை சிறப்புக் கழிவு! : எங்கு? எப்போது?
-
ஆதவ் அர்ஜூனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
-
”விஜய்க்கு தலைமைத்துவ பண்பே இல்லை - என்ன மாதிரியான கட்சி இது?” : சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!
-
இராமநாதபுரம் - 150 புதிய திட்டப் பணிகள் : 50,752 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்!