Tamilnadu
3 ஆண்டுகளுக்கான 90 கலைமாமணி விருதுகள் : அடுத்த மாதம் முதலமைச்சர் வழங்குகிறார்! - பட்டியல் உள்ளே!
தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்குவதுடன், பாரதியார், எம்.எஸ். சுப்புலட்சுமி பாலசரசுவதி ஆகியோர் பெயர்களில் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. மேலும், சிறந்த கலை நிறுவனத்திற்கு கேடயமும், சிறந்த நாடகக்குழுவிற்கு சுழற்கேடயமும் வழங்கப்படுகின்றன.
தற்போது, 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் வழங்கப்படவுள்ளது. கலைமாமணி விருது வழங்கக்கோரி வரப்பெற்ற விண்ணப்பங்கள் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் இயல், இசை, நாட்டியம், நாடகம், திரைப்படம், சின்னத்திரை, இசை நாடகம், கிராமியக் கலைகள் மற்றும் இதர கலைப் பிரிவுகள் என கலைப் பிரிவு வாரியாக பிரிக்கப்பட்டு, கலைமாமணி விருது பெறத் தகுதியுள்ள கலைஞர்களைத் தேர்வு செய்திட கலைப் பிரிவு வாரியாக வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டன.
மேற்படி வல்லுநர் குழுக்களால் அளிக்கப்பட்ட தகுதியுள்ள கலைஞர்களின் பெயர்ப் பட்டியல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, இயற்றப்பட்ட தீர்மானம் மற்றும் பரிந்துரையை ஏற்று 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் பெறும் விருதாளர்களின் பெயர் பட்டியல் இணைப்பில் கண்டவாறு தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் அறிவித்துள்ளது.
கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படும். மேலும், பாரதியார். எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் கலை வித்தகர்களுக்கான அகில இந்திய விருதுகளும் கீழ்கண்டவாறு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய விருது பெறும் கலை வித்தர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலையுடன், 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் வழங்கப்படும்.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் வழங்கப்படும் சிறந்த கலை நிறுவனத்திற்கான கேடயம் மற்றும் சிறந்த நாடகக் குழுவிற்கான சுழற் கேடயம் பெறுவதற்குரிய கலை நிறுவனம் மற்றும் நாடகக் குழு கீழ்கண்டவாறு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த கலை நிறுவனத்திற்கு வழங்கப்படும் கேடயம் மற்றும் சிறந்த நாடகக் குழுவிற்கு வழங்கப்படும் சுழற் கேடயத்துடன் தலா ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அடுத்த மாதம் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில், 2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள், அகில இந்திய விருதுகள், சிறந்த கலை நிறுவனம் மற்றும் நாடகக் குழுவினருக்கான கேடயங்கள் ஆகியவை விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பிக்கப்படும்.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்!
Also Read
-
”விஜய்க்கு தலைமைத்துவ பண்பே இல்லை - என்ன மாதிரியான கட்சி இது?” : சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!
-
இராமநாதபுரம் - 150 புதிய திட்டப் பணிகள் : 50,752 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்!
-
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : அவை என்ன?
-
”கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
தனியார் மருத்துவமனையை தாக்கிய விஜய் கட்சியினர்... கட்சியினரை கட்டுப்படுத்த தெரியாதா என நீதிமன்றம் கேள்வி!