Tamilnadu
Insta-வில் வெளியிட்ட வீடியோ.. ரவுடியை திருக்குறள் வாசிக்க வைத்து நூதன தண்டனை கொடுத்த தூத்துக்குடி போலீஸ்!
தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியை போலீசார் கைது செய்து, திருக்குறள் வாசிக்க வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து சவால் விட்ட கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ராஜா என்ற சரித்திர பதிவேடு குற்றவாளியை செய்து கைது செய்துடன் திருக்குறள் படிக்க வைத்த காவல்துறை
தமிழ்நாட்டில் குற்றச்செயல்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக இன்ஸ்டாவில் கெத்து காட்டுவதாக தங்களது பிறந்தநாளில் ஒரு சிலர் கத்தியை கொண்டு கேக் வெட்டுகின்றனர். அவ்வாறு பொதுமக்களுக்கு அச்சமூட்டும் வகையில் செய்லபடுபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
மேலும் சமூக வலைதளங்களில் பொதுமக்களுக்கு அச்சம் விளைவிக்கும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்களை போலீசார் கண்டறிந்து நூதன தண்டனையும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடியில் ராஜா என்ற ரவுடியை கைது செய்த போலீசார், அவரை திருக்குறள் வாசிக்க வைத்து நூதன தண்டனை கொடுத்துள்ளனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் ஆவார். இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தனது பிறந்த நாளை இவர் கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது கேக் வெட்டப்பட்டதோடு, இந்த நிகழ்வு வீடியோவாகவும் மற்றவர்கள் செல்போனில் எடுக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வீடியோவை ராஜா மற்றும் அவரது நண்பர்கள் தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தனர். அப்போது பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், அவரது எதிரிகளுக்கு எச்சரிக்கை விடும் வகையிலும் "யாரா வேணாலும் இரு.. நம்ம லைனில் கரெக்டா இரு.. திரையரங்கம் சிதறட்டும் இவன்.." என்ற நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்பட பாடலுடன் அந்த வீடியோ பதிவேற்றப்பட்டது.
இந்த வீடியோ வெளியாகி வைரலாக நிலையில், நகர உதவி கண்காணிப்பாளர் மதன், இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சரித்திர பதிவேடு குற்றவாளி ராஜா மற்றும் அவருடன் இரண்டு நபர்களை காவல் நிலையம் முத்தையாபுரம் காவல்துறையினர் வரவழைத்து விசாரணை நடத்தினர். இதில் ராஜா வேறொரு குற்ற சம்பவத்தில் ஈடுபட இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து குற்றவாளி ராஜாவை முத்தையாபுரம் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் தனது பிறந்தநாள் வீடியோவை வெளியிட்டது தொடர்பாக ராஜா மற்றும் அவரிடம் சேர்ந்த இரண்டு பேரை, "ஒழுக்கம் விழுப்பம் தரலான்..." திருக்குறளை வாசிக்க வைத்து, அதன் பொருளையும் வாசிக்க வைத்தனர். அதோடு இது தொடர்பாக வீடியோவும் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் இதுபோன்று வீடியோ வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!