Tamilnadu
திமுக ஆட்சியை பழித்துரைக்கும் அனைவருக்கும் ஒன்றிய அரசே தந்துள்ள நெத்தியடி பதில் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் அதிகளவிலான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், உலக தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகளுடன் துறை சார்ந்த தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள், புத்தாக்கத் திட்டங்கள், திறன் மேம்பாட்டு மையங்கள் போன்ற புதிய திட்டங்களை பெருமளவில் ஈர்த்திட துறை சார்ந்த கொள்கை அறிக்கைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்புகளை கொண்ட தமிழ்நாட்டில், இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்கத்துறை வெளியிட்டுள்ள தொழிற்சாலைகளின் ஆண்டு ஆய்வு அறிக்கையில் 40,127 தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலமான குஜராத் 33,313 தொழிற்சாலைகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து திமுக அரசை விமர்சித்து வருபவர்களுக்கு, ஒன்றிய பா.ஜ.க. அரசே தந்துள்ள 'நெத்தியடி பதில் இது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”திராவிடத்தால் வாழ்கிறோம்! திராவிடமே நம்மை உயர்த்தும்! எல்லோரையும் வாழ வைக்கும்! அமித்ஷா முதல் பழனிசாமி வரை தி.மு.க. ஆட்சியைப் பழித்துரைக்கும் அனைவருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசே தந்துள்ள 'நெத்தியடி பதில்' இதோ!
சட்டம் ஒழுங்கைப் பேணிக்காத்து, தொழில் செய்வதற்கான சூழலை மேம்படுத்தி, தடையற்ற மின்சாரம் - போக்குவரத்து வசதிகள் என அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கி, வேலைக்குத் தேவையான திறன்களை இளம் தலைமுறையினருக்கு அளித்து நாம் நாளும் தீட்டிய திட்டங்களால் இந்தச் சாதனை சாத்தியமாகி இருக்கிறது!
திராவிட மாடல் ஆட்சியின் சாதனைச் சரித்திரம் தொடரும். அரசியல் காழ்ப்புணர்வில் திமுக ஆட்சிக்கு எதிராக அள்ளிவீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை என மக்கள் புறந்தள்ளுவார்கள்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
யாருக்காக செயல்படுகிறார் மோடி? : வரியை மீறி ரசியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் இந்தியா!
-
“பிற்போக்குத்தனமான ஒரு இயக்கம் உள்ளது என்றால் அது RSS தான்” - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
-
“இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர்” - துணை முதல்வர் புகழாரம்!
-
9 நாட்கள் சூரிய சக்தி தொழில் முனைவோர் குறித்த பயிற்சி.. எங்கு? எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!
-
தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல்... 3 நாட்கள் அரசு பயிற்சி.. விண்ணப்பிப்பது எப்படி?