Tamilnadu

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்காக... இழப்பீடு தொகையை அதிகரித்த தமிழ்நாடு அரசு : முழு விவரம் உள்ளே !

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு, விபத்து மரணத்துக்கான இழப்பீட்டை அதிகரித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "2025-2026-ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், "நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு, விபத்து மரணத்துக்கான இழப்பீடு ரூ.1,00,000/- லிருந்து ரூ.200,000/- ஆகவும், விபத்தினால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்பிற்கு நிதி உதவி ரூ.20,000/-லிருந்து ரூ.1,00,000/- ஆகவும், இயற்கை மரணத்துக்கான நிதி உதவி ரூ.20,000/-லிருந்து ரூ.30,000/-ஆகவும், இறுதிச்சடங்கு செய்வதற்கான நிதி உதவி ரூ.2,500/-லிருந்து ரூ.10,000/-ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்"என்று அறிவித்தார்.

அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பொருட்டு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டமானது. தமிழக சிறு, குறு விவசாயிகள், விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் நபர்கள். குத்தகைதாரர்கள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களின் கல்வி, சமூகப் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரநிலை ஆகியவற்றின் முன்னேற்றத்திற்கென செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் உதவிதொகை பெற 2.50 ஏக்கருக்கு மேற்பட நன்செய் நிலத்தை அல்லது 5.00 ஏக்கருக்கு மேற்படாத புன்செய் நிலதி 2/3 சொந்தமாக வைத்திருந்து மற்றும் அந்த நிலத்தில் நேரடியாக பயிர் செய்யும் 18 வயது முதல் 65 வயது வரை உள்ள அனைத்து குறு/சிறு விவசாயிகள் (நேரடி விவசாயம் செய்பவர்) மற்றும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் ஊதியத்திற்காகவோ அல்லது குத்தகை அடிப்படையிலோ ஈடுபட்டுள்ள அனைத்து குத்தகைதாரர்கள் மற்றும் தொழிலாளர்கள் இந்தத் திட்டத்தின்கீழ் மூல உறுப்பினர்களாக பதிவு பெற தகுதி உள்ளவர்களாவர். மேலும், அவர்களைச் சார்ந்து வாழும் குடும்ப உறுப்பினர்களும் இத்திட்டத்தின்கீழ் உறுப்பினர்களாக பதிவு செய்ய தகுதியானவர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது

விபத்து மரணத்திற்கான இழப்பீடு, விபத்தினால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்பிற்கு நிதிஉதவி, இயற்கை மரணத்திற்கான நிதிஉதவி, இறுதிச்சடங்கு செய்வதற்கான நிதிஉதவி ஆகியவைகளை உயர்த்தி வழங்கலாம் என்றும் இக்கருத்துருவினை அரசாணையாக பிறப்பிக்குமாறும் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கூடுதல் தலைமைச்செயலாளர் /வருவாய் நிர்வாக ஆணையர் அவர்களின் கருத்துருவினை அரசு கவனமாக ஆய்வு செய்து, 2025-2026-ஆம் ஆண்டிற்கான வேளாண்மை-உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையில் மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி, நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு ஒன்றில் படிக்கப்பட்ட அரசாணையில் வெளியிடப்பட்ட நிபந்தனைகளுக்குட்பட்டு விபத்து மரணத்துக்கான இழப்பீட்டு தொகையினை ரூ.1.00.000/-லிருந்து ரூ.2,00,000/- ஆகவும், விபத்தினால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்பிற்கு நிதிஉதவி தொகையினை ரூ.20,000/- லிருந்து ரூ.1,00,000/-ஆகவும். இயற்கை மரணத்துக்கான நிதி உதவி தொகையினை ரூ.20.000/- லிருந்து ரூ.30,000/- ஆகவும், இறுதிச்சடங்கு செய்வதற்கான நிதி உதவிதொகையினை ரூ.2,500/- லிருந்து ரூ.10,000/-ஆகவும், உயர்த்தி வழங்கி அரசு ஆணையிடுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: Teynampet To Saidapet: இந்தியாவிலேயே முதல்முறை... Metro சுரங்கப்பாதைக்கு மேல் பாலம்... Animation Video !