Tamilnadu
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!
சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
பல்வேறு நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது என்றும், இதுவரை 77 சதவீத புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் வேலைவாய்ப்பையும் தமிழ்நாடு அரசு உறுதி செய்கிறது என்றும் அவர் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு இணையாக தென் மாவட்டங்களும் தொழில் வளர்ச்சியில் முன்னேறி வருகிறது என்றும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடுகளை ஒன்றிய அரசு வேறு பகுதிகளுக்கு திருப்பிவிடுகிறது என்று குற்றம்சாட்டிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, 2024 முதலீட்டாளர் மாநாட்டில் 631 ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவும், அவற்றில் 80 சதவீத ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். ஐரோப்பாவிலும் "TN Rising" மாநாடு நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!