Tamilnadu
”போக்குவரத்து துறை - 3200 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” சென்னை, தண்டையார்பேட்டை, கோபால் நகரில் தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தலைமை யில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில், பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் ஔவையார் தெரு, வெங்கடேசபுரம் மற்றும் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட தேவையூர் ஆகிய பகுதிகளில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரில் சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை வழங்கினார்.
போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் வயது முதிர்ந்தவர்களிடம் குடிமைப் பொருட்களை வழங்கி, முதலமைச்சர் அவர்கள் உங்களைப் போன்றவர்கள் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தை உணர்ந்து, அவர்களின் வீடு தேடி சென்று பொது விநியோகத்திட்டத்தின் மூலமாக அத்தியாவசிய தேவை உணவு பொருட்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். எனவேதான் உங்களுக்கு இந்த குடிமைப் பொருட்கள் வீடு தேடி வந்து வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். என தெரிவித்தார்.
பின்னர் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
முதலமைச்சர் அவர்கள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவு பொருட்கள் பெறுவதில் சிரமமாக இருப்பதை உணர்ந்து, அவர்களின் இல்லம் தேடி உணவுப்பொருட்கள் வழங்கும் வகையில் தாயுமானவர் என்ற திட்டத்தை சென்னை இன்று தொடங்கி வைத்துள்ளார்கள். அதன்தொடர்ந்து, பேரம்பலூர் மாவட்டத்தில் இந்தித்தொடரைத்தொடங்கிவைக்கும் வகையிலும், பேரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குத் துறைமங்கலம், வெங்கடேசபுரம் மற்றும் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட தேவையூர் ஆகிய பகுதிகளில், 70 வயது கடந்தவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு பொதுவிநியோகத் திட்டம் கீழ் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது ஒரு புரட்சிகரமான திட்டம். மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உணவுப் பொருட்கள் அவர்களது வீட்டிற்கே சென்று வழங்கப்படும் என்பது திட்டத்தினுடையது சிறப்பாகும். எனவே வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் இனிவரும் காலங்களில் எந்த சிரமமும் இன்றி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவுப் பொருட்கள் பெற்றுக் கொள்ளலாம். பெரம்பலூர் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 15,764 வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறவுள்ளனர். குறிப்பி டத்தக்கது.
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தினை முதன் முதலாக செயல்படுத்தினர். விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதனை செய்வதற்கு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு தயார் நிலையில் உள்ளது. சூழ்நிலைக்கேற்றவாறு விவசாயிகளுக்கு தடை இல்லாமல் மும்முனை மின்சாரம் வழங்குவதற்கு உண்டான நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டது வருகிறது.
மேலும், போக்குவரத்து துறையில் காலியாக உள்ள 3,200 பணியிடங்களை நிரப்பும் வகையில் எழுத்து தேர்வு முடிவு பெற்றுள்ளது. மதிப்பெண் அடிப்படையில் அவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டு, 3,200 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்ப டும் என தெரிவித்தார்.
Also Read
-
"தூய்மை தொழிலாளர்களின் பணி நிரந்தரம் கோரிக்கை ஆதிக்க மனநிலையின் வெளிப்பாடு" - ஆதித்தமிழர் பேரவை !
-
முகவரி இல்லாதவர்களை வாக்காளர்களாக சேர்த்தது ஏன்? - தேர்தல் ஆணையர் விளக்கம் !
-
"அன்புமணி சோற்றுக்குள் பூசணிக்காயையே மறைத்திருக்கிறார்" - அமைச்சர் MRK பன்னீர்செல்வம் விமர்சனம் !
-
நாட்டிற்கே முன்னோடியான திட்டம்.. இணைய வழியில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன்.. தொடங்கி வைத்தார் முதல்வர்
-
தருமபுரியில் நலனுக்காக... ரூ.1705 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகள்... திறந்து வைத்த முதலமைச்சர்!