Tamilnadu
79-வது சுதந்திர தினம் : சென்னை கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
79 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றுவதற்காக வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலாளர் முருகானந்தம் வரவேற்று காவல்துறை அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.
பின்னர் தேசியக் கொடியை ஏற்றி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின உரையாற்றினார். இதையடுத்து தகைசால் தமிழர் விருதை பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு முதலமைச்சர் வழங்கினார். பிறகு டாக்டர் அப்துல் காலம் விருதை இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவர் முனைவர் வ.நாராயணனுக்கு வழங்கினார்.
மேலும் கல்பனா சாவ்லா விதை துளிசிமதி முருகசனுக்கும், முதலமைச்சரின் நல் ஆளுமை விருதை மருத்துவர் வி.பிரசண்ண குமார், ப.பாலகிருஸ்ணன், வீ.யமுனா, காகர்லா, பா.கணேசன், க.லட்சுமி பிரியா, த.ஆனந்த்,க க.சு.கந்தசாமி, மருத்துவர் இரா.செல்வராஜ், ஆர்.மோகன் ஆகியோருக்கு வழங்கினார்.
பின்னர், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்ததற்காக மருத்துவர் குமரவேல் சண்முகசுந்தரம், குணசேகரன் ஜெகதீசன் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு விருதுகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.
Also Read
-
TNPSC குரூப் 2, 2ஏ-வில் 1270 காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு : முழு விவரம் இதோ!
-
மெட்ரோ திட்டத்திலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு : DMK IT WING கண்டனம்!
-
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி மறுப்பு : தொடரும் ஒன்றிய அரசின் வஞ்சகம்!
-
“எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு!” : கோவை வருகை தரும் பிரதமர் மோடிக்கு பெ.சண்முகம் கண்டனம்!
-
என் மானத்தை வாங்காதீங்க: வேண்டுகோள் விடுத்த பிக்பாஸ்: Entertainment-காக மூன்று அணிகளாக பிரிந்த BB வீடு!