Tamilnadu
ரூ.78.59 கோடி மதிப்பீட்டில் 20 இடங்களில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தலைமையில் இன்று 13.08.2025, சென்னை, வாலாஜா சாலையில் அமைந்துள்ள சுற்றுலா வளாகத்தில் மாவட்ட வாரியாக சுற்றுலா திட்டப் பணிகள் குறித்து சுற்றுலா அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மானியக்கோரிக்கையின் போது சுற்றுலாத் துறையின் மீது தனிகவனம் கொண்டு பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். அதனை செயல்படுத்தும் விதமாக சுற்றுலாத் துறையின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் முடியும் தருவாயில் உள்ள சுற்றுலா மேம்பாடு மற்றும் கட்டட பணிகளான பூம்புகார் பாரம்பரிய நகரத்தினை ரூ.21.98 கோடி மதிப்பீட்டில் புதுப்பித்தல், கரூர் மாவட்டம் ரூ.2.29 கோடி மதிப்பீட்டில் பொன்னனியாறு நீர் தேக்கத்தினை சுற்றுலாத் தலமாக மேம்படுத்துதல். கன்னியாகுமரி மாவட்டம் ரூ. 3.11 கோடி சித்தார் அணைகள் மற்றும் நீர் தேக்கத்தினை சுற்றுலாத் தலமாக மேம்படுத்துதல். நீலகிரி மாவட்டத்தில் ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் உதகை படகு இல்லத்தில் சாகச மற்றும் சுற்றுச்சூழல் முகாம் தலமாக உருவாக்குதல், செங்கல்பட்டு மாவட்டம் முதலியார் குப்பம் ரூ.1.16 கோடி மதிப்பீட்டில் சாகச மற்றும் சுற்றுச்சூழல் முகாம் தலமாக உருவாக்குதல் மற்றும் நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையில் ரூ. 1.87 கோடி மதிப்பீட்டில் சாகச மற்றும் சுற்றுச்சூழல் முகாம் தலமாக உருவாக்குதல்,
கடலூர் மாவட்டம் பிச்சாவரம் பகுதியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்துதல், கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.3.98 கோடி மதிப்பீட்டில் திற்பரப்பு அருவியை சுற்றுலா தலமாக மேம்படுத்துதல், மாமல்லபுரத்தில் ரூ.8.00 கோடி செலவில் மரகத பூங்காவை பொது-தனியார் பங்களிப்பு முறையில் “ஒளிரும் தோட்டம்” அமைத்தல், ஏற்காட்டில் ரூ.9.82 கோடி மதிப்பீட்டில் அழகியல் நிலப்பரப்பு, காட்சி முனைகள், ஏரி முகப்பு, தெரு அலங்காரம் போன்ற சுற்றுலா வசதிகளை மேம்படுத்துதல், சஞ்சீவிராயன் கோவில் பகுதியில் ரூ.0.93 கோடி மதிப்பீட்டில் காட்சி முனை அமைத்தல், நாகமரை பகுதியில் ரூ.0.48 கோடி மதிப்பீட்டில் காட்சி முனை அமைத்தல்,
ஜவ்வாது மலை தேனீ பூங்கா பகுதியில் ரூ.0.42 கோடி மதிப்பீட்டில் காட்சிமுனை அமைத்தல் மற்றும் ஜவ்வாது மலையில் சுற்றுச்சூழல் பூங்கா பகுதியில் ரூ.0.45 கோடி மதிப்பீட்டில் காட்சிமுனை அமைத்தல், கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.3.26 கோடி மதிப்பீட்டில் மாத்தூர் தொட்டி பாலத்தில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்துதல், அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி அடைக்கல மாதா தேவாலயப் பகுதியை ரூ.1.29 கோடி மதிப்பீட்டிலும், சிவகங்கை மாவட்டம் பிரான் மலைப் பகுதியை ரூ.0.57 கோடி மதிப்பீட்டிலும், திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி பகுதியை ரூ.0.96 கோடி மதிப்பீட்டிலும், தெற்கு கள்ளிக்குளம் பகுதியில் ரூ.3.49 கோடி மதிப்பீட்டிலும் தேவாலயப் பகுதி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ரூ.1.68 கோடி மதிப்பீட்டிலும் கழுகு மலை பகுதி ஆகிய இடங்களை வழிபாட்டு சுற்றுலா தலங்களாக மேம்படுத்துதல், என மேற்கண்ட இடங்களில் நடைபெறும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
Also Read
-
விஜய்யின் ஆந்திரா பயணத்தில் விஷ்ணு ரெட்டிக்கு என்ன வேலை? : தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் கேள்வி!
-
மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறப்பதா? : இரட்டை வேட தவெக அரசுக்கு கீதா ஜீவன் கடும் கண்டனம்!
-
த.வெ.க.வின் நிர்வாகத் தோல்வியைக் கண்டித்து சென்னையில் தி.மு.க ஆர்ப்பாட்டம்! : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
-
“மதத்தைக் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூகநீதிக்கு எதிரானது !” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“விளம்பர வெறியால் கடைமடையில் கருகும் பயிர்கள்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்!