இந்தியா

துணைவேந்தர்கள் தேர்வுக்கான தேடுதல் குழுவை அமைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை : உச்சநீதிமன்றம் அதிரடி!

துணைவேந்தர்கள் தேர்வுக்கான தேடுதல் குழுவை அமைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

துணைவேந்தர்கள் தேர்வுக்கான தேடுதல் குழுவை அமைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை : உச்சநீதிமன்றம் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசு, எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து போட்டி அரசாங்கத்தை நடத்த முயற்சித்து வருகிறது. அம்மாநிலங்களில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் ஆளுநர்கள் அடாவடித்தனத்துடன் நடந்து வருகின்றனர்.

இந்நிலையில்,துணைவேந்தர்கள் தேர்வுக்கான தேடுதல் குழுவை அமைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் 2 பல்கலைக்கழகங்களுக்கு இடைக்கால துணைவேந்தர்களை நியமனம் செய்த ஆளுநரின் முடிவு தன்னிச்சையானது எனக் கூறினார் உச்சநீதிமன்றத்தில் அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்தது. பல்கலைக்கழக விதிமுறைகள் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாகவும், எனவே, அவர் பிறப்பித்த துணைவேந்தர்கள் நியமனம் ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேர்வுகுழுவை அமைக்கும் அதிகாரம் மாநில அரசுக்குதான் உள்ளது என்றும், ஆனால் ஆளுநர் அதற்கு முட்டுக்கட்டை போட்டு தனிக் குழுவை அமைப்பதாகவும் கேரளா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, துணைவேந்தர்கள் தேர்வுக்கான தேடுதல் குழுவை அமைக்கும் அதிகாரம் யு.ஜி.சி விதிப்படி ஆளுநருக்கு இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். தேர்வுக் குழுவை அமைப்பதில் அரசுக்கும், ஆளுநருக்கு இடையே பிரச்சினை இருப்பதால் தேர்வுக் குழுவை உச்சநீதிமன்றமே அமைக்கும் நீதிபதிகள் தெரிவித்தனர். குழு உறுப்பினர்கள் குறித்த பெயர்களை வழங்குமாறு கேரளா அரசுக்கு உத்தரவிட்டனர்.

கேரளா அரசும், ஆளுநர் தரப்பும் நேற்று ஆலோசனை நடத்தி தலா 4 பெயர்கள் வீதம் 8 பெயர்களை இரு தரப்பும் வழங்க வேண்டும். அதன் பிறகு குழுவை உச்சநீதிமன்றம் முடிவு செய்யும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

banner

Related Stories

Related Stories