Tamilnadu

தமிழ்நாட்டிற்கு பலன் அளிக்கிறதா ஒன்றிய அரசின் திட்டங்கள்? : நாடாளுமன்றத்தில் திமுக MPக்கள் கேள்வி!

தமிழ்நாட்டில் PM-DAKSH திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட சுயதொழில் முனைவோருக்கான திறன் மேம்பாடு பயிற்சி குறித்த விவரங்கள் கேட்டு திமுக மக்களவை உறுப்பினர்கள் சி.என்.அண்ணாதுரை மற்றும் ஜி. செல்வம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதன் விவரங்கள் பின்வருமாறு:

தமிழ்நாட்டில் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஈடுபட்டுள்ள பயிற்சி நிறுவனங்களின் விவரங்கள் மற்றும் வழங்கப்படும் படிப்புகளின் விவரங்கள் என்ன?

தமிழ்நாட்டில் குறிப்பாக கிராமப்புற அல்லது பின்தங்கிய மாவட்டங்களில் இந்தத் திட்டம் இளைஞர்களை சென்றடைவதில் உள்ள சவால்கள் என்ன? அவற்றை சமாளிக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?

தமிழ்நாட்டில் பயிற்சிக்குப் பிந்தைய வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதற்கும் தொழில்முனைவோருக்கான நிதி உதவியை உறுதி செய்வதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்ன?

தமிழ்நாட்டில் டிஜிட்டல் கல்வியறிவு, மின் வணிகம், பசுமை வேலைகள் மற்றும் சுகாதாரம் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் PM-DAKSH திட்டத்தை விரிவுபடுத்த அரசிடம் உள்ள திட்டங்கள் என்ன?

கிராம பஞ்சாயத்துகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவது எப்போது?

கிராம பஞ்சாயத்துகளை டிஜிட்டல் மயக்காக்கும் எம்.எம்.பி திட்டத்தின்கீழ் பயன்பெறும் பஞ்சாயத்துகள் குறித்து ஆரணி தொகுதி திமுக மக்களவை உறுப்பினர் தரணிவேந்தன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இத்திட்டத்தின்கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த நிதி எவ்வளவு? டிஜிட்டல் மயமாக்கல், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ஊழியர்களின் பயிற்சிக்காக ஒதுக்கப்பட்டு பயன்படுத்தப்படும் மொத்த நிதியின் அளவு எவ்வளவு?

பஞ்சாயத்து அளவிலான சான்றிதழ்கள் பெறுவது, ஒப்புதல்கள் பெறுவது மற்றும் பிற ஆன்லைன் சேவைகளை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மற்றும் டிஜிட்டல் முறையில் தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.

Also Read: பட்டியலினத்தவர் மீதான வன்முறைகளை தடுக்க நடவடிக்கை என்ன? : ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய ஆ.ராசா MP!