Tamilnadu
”சுமூக தீர்வு கிடைக்கும்” : துப்புரவு பணியாளர்கள் போராட்டம் குறித்து அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!
தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை சுமூகமாக முடிவுக் கொண்டு வரவேண்டும். அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நிச்சயம் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு கிடைக்கும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ” சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் துப்புரவு தொழிலாளர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தை சுமூகமாக முடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து வருகிறார்.
வட மாநில தொழிலாளர்களை துப்புரவு பணியில் ஈடுபடுத்த உள்ளதாக கூறும் தகவல் தவறானது. துப்புரவு தொழிலாளர்களுக்கு தேவையானதை செய்து கொடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நிச்சயம் பேச்சு வார்த்தையில் சமூக தீர்வு கிடைக்கும்.
துப்பரவு பணியாளர்களை நான் சந்திக்கவில்லை என கூறுகிறார்கள். இது தவறான தகவல். போராடி வரும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து 4 முறை பேச்சு வார்த்தை நடத்தியுள்ளேன். துப்புரவு பணியாளர்களை நிரந்தரப்படுத்துவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”திராவிடர் கழகத்தின் நீட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
”தேசத்தை காக்க தி.க, தி.மு.க தான் மருந்து” : சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாட்டில் ஆ.ராசா.எம்.பி பேச்சு!
-
இனி பழைய பொருட்களை அகற்ற கவலை வேண்டாம் : சென்னை மாநகராட்சியின் அசத்தலான திட்டம்!
-
துன்பம் வரும்போது நம்மைக் காப்பவர் யார்? கைவிடுவோர் யார்? : மக்களுக்கு உணர்த்திய கரூர் துயரம்!
-
கரூர் துயர சம்பவம் : அவதூறு பரப்பிய Youtuber மாரிதாஸ்... கைது செய்த போலீஸ்!