இந்தியா

“பொருளாதார வசதியற்ற பெண்களுக்கு சிறப்பு விளையாட்டு அகாடமிகள் அமைக்கப்படுமா?” : திமுக எம்.பி.க்கள் கேள்வி!

“வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதா சுயசார்பு இந்தியா திட்டம்?” என கள்ளக்குறிச்சி எம்.பி. மலையரசன் கேள்வி!

“பொருளாதார வசதியற்ற பெண்களுக்கு சிறப்பு விளையாட்டு அகாடமிகள் அமைக்கப்படுமா?” : திமுக எம்.பி.க்கள் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்தியாவின் வடமுனையான ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் பட்டியல் திருத்த செயல்பாடுகள், தொகுதி மறுவரையறை, அகமதாபாத் விமான விபத்து உள்ளிட்ட ஏராளமான சிக்கல்கள் அரங்கேறிய நிலையில், நேற்றைய நாள் (ஜூலை 21) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.

இத்தொடரில் ஒன்றிய பா.ஜ.க அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பவும், பல்வேறு விவாதங்களை மேற்கொள்ளவும் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி முடிவெடுத்தது.

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 12) நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளும், கண்டனங்களும் பின்வருமாறு,

“விளையாட்டு போட்டிகளில் பட்டியலின பெண்களின் பங்கேற்பை ஊக்குவிக்க நடவடிக்கை என்ன? என காஞ்சிபுரம் எம்.பி. ஜி. செல்வம், திருவண்ணாமலை எம்.பி. சி. என். அண்ணாதுரை கேள்வி!

தமிழ்நாட்டின் பட்டியல் சாதிகள் (SCs), பட்டியல் பழங்குடியினர் (STs) மற்றும் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த பெண் விளையாட்டு வீரர்களை ஆதரிப்பதற்காக நடைமுறையில் உள்ள திட்டங்கள் யாவை?

“பொருளாதார வசதியற்ற பெண்களுக்கு சிறப்பு விளையாட்டு அகாடமிகள் அமைக்கப்படுமா?” : திமுக எம்.பி.க்கள் கேள்வி!

கடந்த ஐந்து ஆண்டுகளில் கேலோ இந்தியா திட்டம் அல்லது பிற திட்டங்களின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் பட்டியல் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த பெண் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை என்ன?

தமிழ்நாட்டில் பொருளாதார வசதியற்ற பெண்களுக்காக பிரத்யேக பயிற்சி மையங்கள் அல்லது விளையாட்டு அகாடமிகளை நிறுவுவதற்கு அரசாங்கத்திடம் உள்ள திட்டங்கள் என்ன?

“வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதா சுயசார்பு இந்தியா திட்டம்?” என கள்ளக்குறிச்சி எம்.பி. மலையரசன் கேள்வி!

கோவிட்-19க்குப் பின் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் சுயசார்பு இந்தியா வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் தொழில் முனைவோருக்கு வழங்கும் சலுகைகள் குறித்து கள்ளக்குறிச்சி திமுக எம்.பி மலையரசன் பின்வரும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த மொத்த பயனாளிகள் மற்றும் நிறுவனங்களின் எண்ணிக்கை என்ன? இதுவரை செலவிடப்பட்ட மொத்த நிதி விவரங்கள் என்ன? சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அதிகமாக உள்ள மாவட்டங்களில் முறையான மற்றும் முறைசாரா துறை தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்த இத்திட்டம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்ன?

இத்திட்டம் உள்ளூர் பொருளாதாரத்திற்கு எவ்வாறு பங்களித்தது? தமிழ்நாடு போன்ற அதிக மக்கள் தொகை மற்றும் அதிக வேலையின்மை உள்ள மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு திட்டத்தை விரிவுபடுத்த அல்லது மாற்றியமைக்க அரசிடம் உள்ள திட்டங்கள் என்ன?

banner

Related Stories

Related Stories