Tamilnadu
மகாராஷ்டிராவில் இப்போதுதான் தடை : தமிழ்நாட்டில் 50 ஆண்டுக்கு முன்பே கை ரிக்ஷாவை ஒழித்த கலைஞர்!
மகாராஷ்டிரா மாநிலம் மாதேரான் என்ற சுற்றுலா நகரத்தில் கை ரிக்ஷா பயன்பாடு தற்போதும் உள்ளது. அது தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள்சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆன பிறகும் ஒரு மனிதனை உட்காரவைத்து இன்னொரு மனிதன் இழுத்துச் செல்லும் கை ரிக்ஷா வண்டிகள் எப்படி அனுமதிக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பியது.
வாழ்வாதாரத்துக்காக மக்கள் இத்தகைய மனிதானமற்ற முறையை தொடர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.இது தனி நபர்களின் கண்ணியத்தை மீறும் செயல் என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக குறிப்பிட்டது.
வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாட்டில் மனித கண்ணியம் என்ற அடிப்படையான கருத்துக்கு எதிராக இந்த நடைமுறை உள்ளது. இதனை அனுமதிப்பது அரசியலமைப்பு உறுதி செய்துள்ள சமூக, பொருளாதார நீதிக்கு எதிரானது என்று கூறி கை ரிக்ஷா திட்டத்துக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உடனடியாக இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
மேலும், கை ரிக்ஷா தொழிலாளர்களுக்கு மின்சார ஆட்டோ வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அவர்கள் மறுவாழ்வுக்கு உடனடியாக நிதி ஒதுக்கி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
60 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில்..
தமிழ்நாட்டில் 1973 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞரால் கை ரிக்ஷாவை ஒழித்து, அதன் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கியதுடன் அவர்களுக்கு இலவசமாக சைக்கிகள் ரிஷ்ஷாக்களை வழங்கினார்.
சமூகத்தின் அடித்தளத்தில் கிடந்து உழலும் சாதாரண சாமான்ய நடுத்தர மக்களின் நல்வாழ்வைக் குறித்தே எந்நேரமும் சிந்தித்து செயலாற்றும் தலைவர் கலைஞர் அவர்களின் சிந்தனையில் பூத்த புரட்சிகரமான திட்டம் இது. மனிதாபிமானத்துடன் கலைஞர் எடுத்த நடவடிக்கை இது. மனிதனை அமர்த்தி மனிதனே இழுக்கும் அவலத்துக்கு கலைஞர் முற்றுப்புள்ளி வைத்த நாள் இது.
தற்போது 50 ஆண்டுகள் கழித்து கலைஞரின் சிந்தனையை உச்சநீதிமன்றம் பிரதிபளித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கை ரிக்ஷாவுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
மும்முரமாக நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு!
-
”நாட்டு மக்களின் வாக்குகள் திருடப்படுகின்றன” : தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு வைத்த ராகுல் காந்தி!
-
”கலைஞரின் ஒளியில் வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
முத்தமிழறிஞர் நினைவுநாளில் 2 புதிய திட்டங்கள் தொடக்கம் - 8 புதிய நூல்கள் வெளியீடு! : முழு விவரம் உள்ளே!
-
“2025 ஆம் ஆண்டில் 17-வது சம்பவம் இது!” : மீனவர் கைது குறித்து ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!