Tamilnadu
”2026-ல் மீண்டும் தி.மு.க-வுக்கு ஆட்சி கிரீடத்தை சூட்ட மக்கள் தயார்” : அமைச்சர் சேகர்பாபு பேட்டி!
சென்னை பெரம்பூரில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கட்டப்பட்டு வரும் திரு.வி.க நகர் மற்றும் பெரியார் நகர் புதிய பேருந்து நிலையம், சேத்துப்பட்டில் கட்டப்பட்டு வரும் நவீன சலவைக் கூடத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் பெருநகர் வளர்ச்சி குழும தலைவருமான சேகர் பாபு இன்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு," சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் பேருந்து நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.பெரியார் நகர் பேருந்து நிலையம், திரு.வி.க.நகர் பேருந்து நிலையத்தை செப்டம்பர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க இருக்கிறார்.
அதேபோல், ஆவடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் இன்னும் 3 மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
திமுக கூட்டணி கொள்கை கூட்டணி. அவர்களை போன்று சந்தர்ப்பவாத கூட்டணி கிடையாது. இந்தியாவிலேயே மக்கள் நலப் பணியில் முதன்மையாக இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 2026 சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை கொடுத்து திமுகவை மீண்டும் ஆட்சி கிரீடம் சூட மக்கள் தயராக இருக்கிறார்கள்.
2026ல் நிச்சயம் மாற்றம் வரும். தேர்தல் முடிந்தவுடன் விஜய் மீண்டும் சினிமாவிற்கு செல்கிறேன் என்ற மாற்றத்தை ஏற்படுத்துவார். அந்தர் பல்டி, ஆகாச பல்டி அடித்தாலும் மக்களிடம் எடுபடாது.” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“குடமுழுக்கைக் கூட ஒழுங்காக நடத்தத் துப்பு இல்லாத த.வெ.க அரசு” : முரசொலி தலையங்கம் விளாசல்!
-
“மாற்றம் எனச் சொல்லி.. அண்டப் புளுகை, ஆதவ் அர்ஜுனா புளுகாக மாற்றிவிட்டார்களோ?” : இ.பரந்தாமன் கண்டனம்!
-
ஒரே நாளில்... கோவையை தொடர்ந்து மதுரை.. கொலை நகரமாகும் தூங்கா நகரம்... வேடிக்கை பார்க்கும் தவெக அரசு!
-
விபரீதமான விளையாட்டு... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 பள்ளி மாணவர்கள் கைது.. கள்ளக்குறிச்சியில் பரபர!
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!