தமிழ்நாடு

”மோடி சேவை கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே” : பதிவுத் தபால் சேவையை நிறுத்தம் - சு.வெங்கடேசன் MP எதிர்ப்பு!

பதிவுத் தபால் சேவையை நிறுத்தப்படும் என்ற ஒன்றிய அரசின் முடிவிற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

”மோடி சேவை கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே” : பதிவுத் தபால் சேவையை நிறுத்தம் - சு.வெங்கடேசன் MP எதிர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசு ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்களை முடக்குவதிலேயே குறியாக இருந்து வருகிறது. தற்போது எளிய மக்கள் பயன்படுத்தி வரும் பதிவுத் தபால் சேவையை செப்டம்பர் மாதம் முதல் நிறுத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பிற்கு, தபால் ஊழியர்கள் சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மோடி சேவை கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”128 ஆண்டு நடைமுறையில் இருந்த பதிவுத் தபால் சேவை செப்டம்பர் முதல் நிறுத்தம். விரைவுத் தபால் சேவையுடன் இணைப்பு என அஞ்சல்துறை அறிவிப்பு.

பதிவுத் தபால் சேவை குறைந்த பட்ச கட்டணம் ரூ. 26.

விரைவுத் தபால் எனில் ரூ. 41

பதிவுத் தபால் ஒப்புகை கட்டணம் ரூ. 3. விரைவுத் தபாலில் ரூ.10

பதிவுத் தபால் நபருக்கே போய்ச் சேரும். விரைவுத் தபால் முகவரிக்கு போய்ச் சேரும்.

பதிவுத் தபால் எடை கூடினால் மட்டுமே கட்டணம் கூடும். தேசம் முழுக்க எவ்வளவு தூரம் என்றாலும் ஒரே கட்டணம். விரைவுத் தபால் எடை கூடினாலும் கூடும். தூரம் கூடினாலும் கூடும்.

எல்லாம் எதற்கு? மக்களை தனியார் கூரியர் நிறுவனங்களை நோக்கி தள்ளுகிற ஏற்பாடு.

"தக் சேவா; ஜன் சேவா" என்பது அஞ்சல் துறையின் முழக்கம். அதாவது அஞ்சல் சேவை மக்கள் சேவையாம்.

உண்மையில் "மோடி சேவை கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories