Tamilnadu
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 6,000 பேருக்கு கடனுதவி : தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள், நலிவடைந்த பழங்குடியினர் (PVTG), திருநங்கைகளை (மூன்றாம் பாலினத்தவர்) கொண்டு சிறப்பு சுய உதவிக் குழுக்களை அமைப்பதன் வாயிலாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அவர்களின் வறுமை மற்றும் பாதிப்புகளை குறைத்து, வாழ்வாதாரம் மேம்படுவதற்கான முறையான முயற்சிகளை எடுத்து வருகிறது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சிறப்பு சுய உதவிக் குழுக்களில் உள்ள மாற்றுத் திறனாளிகள் (ஆண்/பெண்) தனிநபர் மற்றும் திருநங்கைகளின் (மூன்றாம் பாலினத்தவர்) வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், அவர்களை தொழில் முனைவோராக ஊக்குவித்திடவும், தனி நபர் ஒருவருக்கு ரூ.40,000/- வீதம் 6,000 நபர்களுக்கு கடனுதவி வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன் பெறுவதற்கான தகுதிகள்:
மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவரது பெற்றோர்/கணவர்/மனைவி ஆகியோர் சுய உதவி குழுக்களில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
திருநங்கையர்கள் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருந்தாலும் அல்லது இல்லாமல் இருந்தாலும் தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் ஒவ்வொருவருக்கும் இக்கடனுதவி வழங்கப்படும்.
18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
ஊரகப் பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
நிரந்தர முகவரி இருக்க வேண்டும்.
வங்கிக் கணக்கு தனி நபர் பெயரில் தொடங்கி இருக்க வேண்டும்.
மாற்றுத் திறனாளி எனில் UDID அடையாள அட்டை அல்லது மற்ற அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.
திருநங்கையர்கள் எனில் சமூக நலத்துறையால் வழங்கப்படும் அடையாள அட்டை.
Also Read
-
காவல் துறை, தீயணைப்பு, மீட்புப்பணி, சிறைகள் துறைக்கு புதிய கட்டடங்கள்... திறந்து வைத்தார் முதலமைச்சர் !
-
நடராஜர் கோவில்: கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்களா? - உயர்நீதிமன்றம் கேள்வி !
-
INDvsENG : 15 முறையாக தோல்வியடைந்து மோசமான சாதனையை படைத்த இந்தியா... பரிதாப நிலையில் கில் !
-
திருநங்கையர் கொள்கை - 2025யினை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : நோக்கம் மற்றும் இலக்குகள் என்ன?
-
ஆகஸ்ட் 2 முதல் “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!