Tamilnadu

பிரதமரின் மக்கள் மருந்தகத்தின் மருந்துகள் தரமானவையா? : மக்களவையில் மலையரசன் MP கேள்வி!

பிரதமரின் மக்கள் மருந்தகம் திட்டத்தின்கீழ் மக்களுக்கு வழங்கப்படும் பொது மருந்துகளின் பட்டியலை வெளியிடச் சொல்லி கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினர் மலையரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதன் விவரம்:

பொதுமக்களிடையே, குறிப்பாக கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் பொது மருந்துகளின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் என்ன? பொது மருந்துகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் அரசாங்கம் எதிகொண்ட சவால்கள் என்ன? மற்றும் அவற்றைச் சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

தமிழ்நாட்டில் திறக்கப்பட்டுள்ள மக்கள் மருந்தகத்தின் மொத்த எண்ணிக்கை மற்றும் நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் நிறுவ இலக்கு வைக்கப்பட்ட மையங்களின் எண்ணிக்கை என்ன?. மக்கள் மருந்தகம் திட்டத்தின்கீழ் உயிர்காக்கும் அல்லது விலையுயர்ந்த மருந்துகளைச் சேர்க்க அரசாங்கம் வகுத்துள்ள திட்டங்கள் என்ன?. மக்கள் மருந்தகங்களில் விற்கப்படும் பொது மருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவது எப்போது?

இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பு WHO விதிமுறையான 1,000 பேருக்கு 3.5 படுக்கைகள் என்ற அளவைவிட மிகக் குறைவாக உள்ளது ஏன் என வேலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் தற்போதுள்ள மக்கள்தொகை-படுக்கை விகிதத்தின் விவரங்களை மாநில வாரியாக வெளியிடுக?.நோயாளி-மருத்துவர் விகிதத்தில் WHO விதிமுறைகளுக்கு இணங்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன?

நோயாளி - செவிலியர் விகிதம், நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள்-மருத்துவ விகிதம் மற்றும் இது தொடர்பாக அனைத்து ஒன்றிய அரசின் திட்டங்கள் மற்றும் ஒன்றிய - மாநில அரசுகளின் கூட்டுத் திட்டங்களுக்கும் நிதி உதவியை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.

Also Read: கொரோனா வைரஸின் புதிய வகைகள் பரவுகின்றதா? : ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய ஆ.ராசா MP!