Tamilnadu
முத்தமிழறிஞர் கலைஞரின் மகன் மு.க.முத்து காலமானார்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான மு.க.முத்து, வயது மூப்பின் காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 77.
கலைத்துறையில் பேரார்வம் கொண்ட மு.க. முத்து, 1972 ஆம் ஆண்டில் வெளியான 'பிள்ளையோ பிள்ளை' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு மு.க.முத்து நடித்த 'பூக்காரி', 'அணையா விளக்கு', 'சமையல்காரன் போன்ற படங்கள்', தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.
நடிப்பில் மட்டுமல்லாமல், தனது சொந்தக் குரலில் பாடல்களை பாடி அசத்தியுள்ளார் மு.க. முத்து. பன்முகத்திறமை கொண்ட மு.க. முத்து, வயது மூப்பால் தனது 77-வது வயதில் உயிரிழந்தார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள மு.க.முத்துவின் உடலுக்கு, பல்வேறு தரப்பினரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மு.க. முத்துவின் உடலுக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது தனது சகோதரர் மு.க. முத்துவின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் ஆறுதல் தெரிவித்தார்.
Also Read
-
தமிழ்நாடுக்கு திட்டங்களும் இல்லை! சிலிண்டரும் இல்லை! - தி.மு.க கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
-
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குக: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் 25 இலட்சம் பேருக்கு பட்டா! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்!
-
“ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் பெறக்கூடாது என்பது கொடூரமான சர்வாதிகார மனோபாவம்!” : முரசொலி தலையங்கம்!
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!