இந்தியா

மாட்டிறைச்சி உற்பத்தி : பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தர பிரதேச மாநிலம் முதலிடம்!

இந்தியாவின் மொத்த மாட்டிறைச்சி உற்பத்தியில் உத்தரப் பிரதேசம் மட்டும் 33%க்கும் அதிகமாக உள்ளது.

மாட்டிறைச்சி உற்பத்தி : பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தர பிரதேச மாநிலம் முதலிடம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே மக்களின் உணவு உரிமைகள் மீது தொடர்ந்து தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில்இந்துத்துவா கும்பல் மக்களின் உணவு உரிமைகளில் தலையிட்டு வருகிறது.

அதிலும், மாட்டிறைச்சியைச் சாப்பிடக்கூடாது என கூறி, மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு கூட தமிழ்நாட்டில் இந்துத்துவா கும்பலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மாட்டிறைச்சி திருவிழா நடைபெற்றது.

பா.ஜ.க தலைவர்கள் கூட மாட்டிறைச்சி தடை செய்ய வேண்டும் என மறைமுகமாகவும், நேரடியாகவும் பேசி வருகிறார்கள். இது அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், 2023 -24 ஆண்டில் இந்தியாவிலேயே ஒட்டுமொத்த மாட்டிறைச்சி உற்பத்தியில் பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தர பிரதேச மாநிலத்தில் 745.65 (33%) மாட்டிறைச்சி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்ற புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.

கேரளா- 248.89 டன், மகாராஷ்டிரா - 229.74 டன், ஆந்திரப் பிரதேசம் - 188.13 டன், தெலுங்கானா - 158.29 டன், பீகார்-134.25 டன், பஞ்சாப் - 117.06 டன், தமிழ்நாடு - 60.02 டன் மாட்டிறைச்சி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த மாட்டிறைச்சி உற்பத்தியில் உத்தரப் பிரதேசம் மட்டும் 33%க்கும் அதிகமாக உள்ளது.

banner

Related Stories

Related Stories