Tamilnadu
ஓரணியில் தமிழ்நாடு : 1,35,43,103 உறுப்பினர்கள் கழகத்தில் இணைப்பு - மயிலாடுதுறையில் மக்களை சந்தித்த CM!
நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க திராவிட முன்னேற்றக் கழகத்தில் மக்களை உறுப்பினர்களாக சேர்க்கும் “ஓரணியில் தமிழ்நாடு” என்ற மாபெரும் முன்னெடுப்பு திட்டத்தில் உறுப்பினர்கள் சேர்க்கையை கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் 3.7.2025 அன்று சென்னை, ஆழ்வார்பேட்டையில் மக்களை நேரடியாக சந்தித்து தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, 10.7.2025 அன்று திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சன்னதி தெருவில் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், “ஓரணியில் தமிழ்நாடு”என்ற மாபெரும் முன்னெடுப்பு திட்டத்தில், மக்களை நேரடியாக சந்தித்து, இத்திட்டத்தில் உறுப்பினர்களை சேர்த்தார்.
மேலும், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் கழக தகவல் தொழில்நுட்ப அணியால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை (War Room) 12.7.2025 அன்று கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தில் மக்களை உறுப்பினர்களாக சேர்க்கும் “ஓரணியில் தமிழ்நாடு” என்ற மாபெரும் முன்னெடுப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இணைக்கப்பட்ட மக்களின் விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தந்த கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்றையதினம் (16.7.2025) “ஓரணியில் தமிழ்நாடு” என்ற மாபெரும் முன்னெடுப்பு திட்டத்தில் மன்னம்பந்தல் ஊராட்சி, அம்பேத்கர் தெருவில் மக்களை நேரடியாக சந்தித்து உறுப்பினர்களை சேர்த்தார்.
இந்நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், மாவட்ட கழகச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன், மன்னம்பந்தல் ஊராட்சி மன்ற தலைவர் சூர்யா, மயிலாடுதுறை கிழக்கு ஒன்றியச் செயலாளர் முருகமணி ஆகியோர் உடனிருந்தனர்.
கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் அழைப்பை ஏற்று “ஓரணியில் தமிழ்நாடு” என்ற மாபெரும் முன்னெடுப்பு திட்டத்தில் இதுவரை 1,35,43,103 நபர்கள் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!