Tamilnadu

பூசாரிகளின் செயல்... திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி... உண்மையை விளக்கிய TN Fact Check!

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான நல்ல விஷயங்கள் பார்த்து பார்த்து செய்யப்பட்டு வருகிறது. சொன்னதையும் தாண்டி சொல்லாத விஷயங்களையும் செய்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதில் இந்து அறநிலையத்துறை மிகவும் சிறப்பாக செய்து வருகிறது.

திமுக இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று வதந்தி பரப்ப பலரும் முயன்றாலும், மக்கள் அதனை தூக்கியெறிந்து திமுகவை தேர்ந்தெடுத்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், அமைச்சர் சேகர்பாபு இந்து அறநிலையத்துறை பொறுப்பை ஏற்ற பின்னர், பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.

குறிப்பாக இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை கையகப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இதுவரை 2000-க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல ஆண்டுகளின் கனவான அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் பலர் மத்தியலும் வரவேற்பை பெற்று வருகிறது.

இருப்பினும் இதனை வைத்து எப்படியாவது அவதூறு பரப்ப வேண்டும் என்று சிலர் கங்கணம் கட்டி சுற்றித்திரியும் நிலையில், தற்போது இந்த திட்டம் மூலம் பயிற்சி பெற்ற பூசாரிகள் போதையில் நடனமாடுவதாக வதந்தி ஒன்று பரவி வருகிறது. இந்த நிலையில் இது முற்றிலும் பொய் என்று TN Fact Check தெரிவித்துள்ளது.

இதுகுறித்து TN Fact Check வெளியிட்டுள்ள விளக்கம் வருமாறு :

"அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம்; பெரிய மாரியம்மன் கோயிலில் பூசாரிகள், போதையில் நடனமாடும் காட்சிகளும், பெண்கள் மீது விபூதி அடித்த காட்சிகளும் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது" என்று குறிப்பிட்டு ஒரு காணொளி பகிரப்பட்டு வருகிறது.

இது திரிக்கப்பட்ட தகவல் ஆகும்.

"வீடியோவில் வரும் கோமதி விநாயகம் என்பவர் தக்கார் தீர்மானத்தின் அடிப்படையில் 20.12.2024 அன்று தற்காலிக அர்ச்சகராக நியமிக்கப்பட்டவர். தற்போது அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்." என்று ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் செயல் அலுவலர் விளக்கமளித்துள்ளார். இவரை அனைத்துச் சாதியினர் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் வந்தவர் என்று திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகின்றனர்.

Also Read: UGC Net 2025 : ரிக் வேதம் vs ஆங்கில இலக்கியத் துறை.. சமஸ்கிருதம் குறித்த கேள்விக்கு சு.வெ. MP கண்டனம்!