Tamilnadu
”பழனிச்சாமி அவர்களே வாயை மூடி பேசவும்” : தி.மு.க IT WING பதிலடி!
வாயை மூடி, பேசவும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க IT WING பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்து தி.மு.க IT WING வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவு வருமாறு:-
தமிழர்களின் பண்பாட்டு பெருமையை நிலை நிறுத்திய கீழடி அகழாய்வு முடிவுகளை ஒன்றிய பாஜக அரசு ஏற்க மறுக்கும் வஞ்சகத்தை அதன் கூட்டணியில் உள்ள அதிமுக ஏன் கண்டிக்க மறுக்கிறது?" என்று திமுக ஐடி விங் கேட்டதற்கு பதில் சொல்ல திராணியின்றி, கார்ட்டூன் போட்டு அவமதித்து விட்டார்கள் என்று தனது கட்சியின் ஐடி விங் மூலம் புகார் கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவின் ஊடகங்கள் ஒவ்வொரு நாளும் தி.மு.கழகத் தலைவரையும், கழக முன்னோடிகளையும், கழக குடும்பத்தினரையும் Body Shaming முறையில் இழிவுபடுத்தி வெளியிடுகின்ற அளவிற்கு, திமுக ஐடி விங் ஒரு போதும் தன் தரத்தை குறைத்துக் கொண்டதில்லை. அதிமுகவின் செயல்பாடற்ற தலைமையைத்தான் அம்பலப்படுத்தியிருந்தோம்.
கீழடி அகழாய்வு உண்மைகளைப் புதைக்க முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் வஞ்சகத்திற்கு துணை போகும் துரோகத்தை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிற அதிமுக, இதை திசை திருப்பலாம் என நினைத்து, திமுக ஐடி விங் மீது எத்தனை புகார்கள் கொடுத்தாலும், உண்மையை ஒருபோதும் மறைக்க முடியாது.
பாஜகவிடம் பம்மிப் பதுங்கி தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து துரோகம் செய்யும் அதிமுக கீழடி விவகாரத்திலும் பாஜகவின் காலடியில்தான் மண்டியிட்டுக் கிடக்கிறது. கார்ட்டூன் பதிவின் கருத்தை / கேப்ஷனை விட்டுவிட்டு சாதாரண கார்ட்டூனுக்கு இத்தனை முன்னாள் அமைச்சர்கள் மீடியா முன்வந்து பேசுகிறீர்களே? இதில் எத்தனை பேர் கீழடிக்காக, தமிழர் நாகரீகத்தை காப்பதற்காக குரல் கொடுத்தீர்கள் என்ற கேள்விக்கு பதில் உண்டா?
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!