Tamilnadu
”இனியும் போர் வேண்டாம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
இஸ்ரேல் மீதான ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் நேரடி தாக்குதலை நடத்தியது. காசா மீது வான்வெளி தாக்குதல் மட்டுமின்றி தரைவழியாகவும் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் தற்போதுவரை 50 ஆயிரத்துக்கு அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போரினை நடத்தி வந்த நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் கடந்த ஆண்டு ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்திய நிலையில், அதன் பின்னர் இந்த இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து யார் வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற பதற்றம் நிலவி வந்தது.
இந்த நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவத் தளவாடங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் நேற்று கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதற்கட்ட தகவலின்படி ஈரான் ஆயுதப்படைத் தலைமைத் தளபதி முகமது பகேரி மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி கோலம் அலி ரஷீத், அணு விஞ்ஞானிகள் முகமது மெஹ்தி தெஹ்ரான்சி மற்றும் ஃபெரேடவுன் அப்பாசி ஆகியோர் கொல்லப்பட்டதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுமார் 200 ட்ரான்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அரசும் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தாக்குலுக்கும் தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும், இது முழுக்க முழுக்க இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
இந்நிலையில் இனியும் போர் வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் பொறுப்பற்ற அத்துமீறிய செயலாகும். இது போரை மேலும் விரிவுப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தும். காசா மீது இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான குண்டுவீச்சு தாக்குதலால் பாலஸ்தீன மக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். இதுபோன்ற வன்முறை நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டும். அரசியல் ரீதியில் தீர்வுகான உலக நாடுகள் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இனியும் போர் வேண்டாம்” வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
“அவதூறு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து நீலிக்கண்ணீர் வடிக்கிறார் பழனிசாமி” : அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி!
-
சென்னை பறக்கும் ரயில் நிறுவனத்தை மெட்ரோவுடன் இணைப்பது எப்போது? - கனிமொழி MP கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்!
-
"திராவிட மாடல் ஆட்சியில் கோயம்புத்தூர், மதுரை IT நகரங்களாக உருப்பெறுகிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
இனி பேரிடர் குறித்து கவலையில்லை... நாசாவுடன் சேர்ந்த இஸ்ரோ : விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள் !
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம் : "நாடாளுமன்றம் முடிவு செய்யட்டும்" - உச்சநீதிமன்றம் கருத்து !