Tamilnadu
நாடுமுழுவதும் பக்ரீத் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் : வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட இஸ்லாமிய மக்கள்!
இறைவனின் தூதரான இப்றாகீம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் (அரபி மாதம்) துல்ஹஜ் 10-ம் நாள், ‘ஹஜ் பெருநாள் எனப்படும் பக்ரீத்’ போற்றிக் கொண்டாடப்படுகிறது. . உலகம் முழுவதும் இந்தப் பண்டிகை தியாகப் பெருநாள் எனப் பொருள்படும் அரபிய பதமான, ‘ஈத் அல்-அதா’ என்றே அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் நாடுமுழுவதும் இஸ்லாமியர்களின் மிகவும் முக்கியமான பண்டிகையாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. வேலூர் ஆர்.என்.பாளையத்தில் உள்ள ஈத்கா மைதானத்தில் இன்று ஈகை திருநாளாம் பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொழுகை செய்து பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை கூறி மகிழ்ந்தனர்.
அதேபோல் புதுக்கோட்டை ஈத்கா பள்ளிவாசலில் ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை உடுத்தி, ஒருவரையொருவர் கட்டியணைத்து தொழுகையில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் உள்ள ஈத்கா மைதானங்கள், பள்ளிவாசல்களில் நடைபெற்ற பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெறுகிறது. இதில் ஆற்காடு நவாப் குடும்பத்தினர் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.
அதேபோல் இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
‘மேகதாது அணை விவகாரம்.. தமிழ்நாட்டுக்கு பாதிப்பு.. நாடாளுமன்றத்தில் திமுக அவை ஒத்திவைப்பு நோட்டீஸ்!’
-
“தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் அடிகளார்.. வாழ்க மறைமலையடிகள் புகழ்!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
பள்ளிகளில் தொடரும் தவெக ரீல்ஸ்.. மாணவர்களின் நிலை என்ன ஆகும்.. அமைச்சரின் உத்தரவுக்கு மதிப்பில்லையா?
-
இவையெல்லாம் மறைக்கவே போலீஸ் பாணி... தவெக அரசின் அராஜகத்தை புட்டுப்புட்டு வைத்த முரசொலி!
-
தவெக ஆட்சியின் 60 நாட்களில் பதிவான 6 காவல்துறை தொடர்பான உயிரிழப்புகள்! : பட்டியலிட்ட திமுக!