Tamilnadu
கல் குவாரியில் விபத்து : உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், மல்லாக்கோட்டை கிராமத்திலுள்ள கல் குவாரியில் பாறை மற்றும் மண் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அறிவித்துள்ளார்.
அதில், ”சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம், மல்லாக்கோட்டை கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான கல் குவாரியில் இன்று எதிர்பாராதவிதமாக பாறை மற்றும் மண் சரிந்து விழுந்த விபத்தில் கல் குவாரியில் பணி செய்துகொண்டிருந்த முருகானந்தம், ஆறுமுகம், கணேசன், ஆண்டிச்சாமி மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேரந்த ஹர்ஷித் ஆகிய ஐந்து நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்களை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி மீட்பு நடவடிக்கைளை மேற்கொள்ளவும் அறிவுத்தினேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மைக்கேல் என்பவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
"தூய்மை தொழிலாளர்களின் பணி நிரந்தரம் கோரிக்கை ஆதிக்க மனநிலையின் வெளிப்பாடு" - ஆதித்தமிழர் பேரவை !
-
முகவரி இல்லாதவர்களை வாக்காளர்களாக சேர்த்தது ஏன்? - தேர்தல் ஆணையர் விளக்கம் !
-
"அன்புமணி சோற்றுக்குள் பூசணிக்காயையே மறைத்திருக்கிறார்" - அமைச்சர் MRK பன்னீர்செல்வம் விமர்சனம் !
-
நாட்டிற்கே முன்னோடியான திட்டம்.. இணைய வழியில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன்.. தொடங்கி வைத்தார் முதல்வர்
-
தருமபுரியில் நலனுக்காக... ரூ.1705 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகள்... திறந்து வைத்த முதலமைச்சர்!