Tamilnadu

தி.மு.க.வின் 4 ஆண்டு சாதனைகளை விளக்குகிற புகைப்படக் கண்காட்சி! : துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

சென்னை கொளத்தூர் ஜி.கே.எம்.காலனி மைதானத்தில் கொளத்தூர் தொகுதி திமுக சார்பில் ஏற்பாட்டில், மே 17,18,19 ஆகிய மூன்று நாள்கள் நடைபெறவுள்ள திராவிட மாடல் ஆட்சியின் நான்காண்டுச் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்தக் கண்காட்சியில் திராவிட மாடல் அரசு, கடந்த நான்கு ஆண்டு ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களான மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் மற்றும் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வெளிப்படுத்தும் வகையிலான புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது.

புகைப்படக் கண்காட்சி அரங்கினுள் காணொளி திரை அமைக்கப்பட்டுள்ளது. அதில் திமுக அரசின் திட்டங்களை விளக்கும் 3டி காணொளி காட்சிப்படுத்தப்படுகிறது. இதனை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

இக்கண்காட்சியை தொடங்கி வைக்க, கொளத்தூர் வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை, கொளத்தூர் தொகுதி ஜி.கே.எம்.காலனி சாலையில் இரு புறமும் பொதுமக்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

மேலும், ஆங்காங்கே மேடைகள் அமைக்கப்பட்டு, அதில் திராவிட மாடல் அரசின் திட்டங்களை வெளிப்படுத்தும் வகையில்  வடிவமைக்கப்பட்டிருந்தது. திராவிட மாடல் ஆட்சியில் நான்காண்டு சாதனைகளான காலை உணவு திட்டம், மகளிர் உரிமைத்தொகை, பிங்க் ஆட்டோ, முதல்வர் படைப்பகம், முதல்வர் கல்விச்சோலை என மாணவ மாணவிகள், மகளிர் ஆட்டோ ஓட்டுநர்கள், அணிவகுத்து துணை முதலமைச்சரை வரவேற்றனர்.

Also Read: பொறியியல் படிப்புக்கு 10 நாட்களில் 1.69 லட்சம் பேர் விண்ணப்பம் - அமைச்சர் கோவி. செழியன் !