Tamilnadu
பொள்ளாட்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளிகள் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
கோவை பொள்ளாச்சியில் 2019 ஆம் ஆண்டு இளம் பெண்களை அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட பொள்ளாச்சியை சேர்ந்த சபரி ராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அதிமுக மாணவரணியை சேர்ந்த அருளானந்தம், ஹிரண்பால் பாபு மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரை போலிஸார் கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு தொடர்பாக கோவை மகளிர் நீதிமன்றம் மற்றும் போஸ்கோ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்களிடம் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது.
மேலும் வழக்கு தொடர்பாக அரசு தரப்பு சாட்சிகளிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் அணைத்து விசாரணையும் முடிவடைந்ததை அடுத்து இன்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி நந்தினி தேவி அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளார்.
ஆனால் இவர்களுக்கான தண்டனை விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இன்று 12 மணிக்கு அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களும், மாதர் சங்கத்தினரும் இந்த தீர்ப்பை வரவேற்று வருகிறார்கள்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!