Tamilnadu
போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி : தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் சா.மு. நாசர் பங்கேற்பு!
கத்தோலிக்க திருச்சபையின் 266-வது தலைவராக அர்ஜென்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் கடந்த 2013-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். இவர் LGPTQ சமூகத்தினர் மற்றும் பாலின சமத்துவம் குறித்து தெரிவித்த முற்போக்கு கருத்துக்கள் பெரும் ஆதரவை பெற்றுத்தந்தது.
இதனிடையே உடல் நலக்குறைவால் கடந்த பிப்ரவரி 14-ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த போப் பிரான்சிஸ் மார்ச் 23ம் தேதி வாடிகன் திரும்பினார்.
இந்நிலையில், நேற்று உடல்நலக்குறைவு காரணமாக தனது 88-வது வயதில் போப் பிரான்சிஸ் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் இருந்து அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், பரிவோடும்,”முற்போக்குக் கொள்கைகளோடும் கத்தோலிக்கத் திருச்சபையினை வழிநடத்தி, பெரும் மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமையான திருத்தந்தை போப் பிரான்சிஸ் அவர்களின் மறைவு குறித்து அறிந்து மிகவும் வேதனையடைந்ததாகத் தெரிவித்திருந்தார்.
அதோடு, இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், மறைந்த போப் பிரான்சிஸ் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், ரோம் நகர் வாடிகனில் நடைபெறும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் சா.மு. நாசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ எஸ். இருதயராஜ் ஆகியோர் கலந்து கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!
-
”பாலம் சிறப்பானது ; பெயர் அதனினும் சிறப்பானது” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
"அரசு அலுவலர்கள் சிறப்பாக செயல்பட்டால்தான் அரசின் திட்டங்கள் மக்களை சேரும்" - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் போட்டிகள்... யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!