Tamilnadu
மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் 118 அறிவிப்புகள்! : முழு விவரம் உள்ளே!
2025 – 2026 நிதி ஆண்டிற்கான மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறையின் 118 அறிவிப்புகளை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெளியிட்டார். அவை, பின்வருமாறூ,
1. பதிமூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் 500 புதிய முதுநிலை மருத்துவப் பட்ட மேற்படிப்பு இடங்கள் (PG Seats) உருவாக்கப்படும்.
2. ஐம்பது அரசு மருத்துவமனைகளில் ரூ.164.5 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும்.
3. தமிழ்நாடு முழுவதும் 300 துணை சுகாதார நிலையக் கட்டடங்கள் ரூ.137.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
4. அறுபது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் ரூ.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
5. ஐம்பது மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தேர்வு செய்து, டயாலிசிஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும்.
6. தமிழ்நாட்டில் உள்ள 7,618 எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து, கல்வி மற்றும் மருத்துவ தேவைகளுக்காக மாதந்தோறும் ரூ.1000/- நிதி உதவி வழங்கப்படும்.
7. “முதலமைச்சரின் சிசு பாதுகாப்புப் பெட்டகம்" ரூ.8.07 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், இரும்புச்சத்து சொட்டு மருந்து, வைட்டமின் டி3 மற்றும் மல்டி வைட்டமின் சொட்டு மருந்துகள் ஆகியவை அடங்கிய “முதலமைச்சரின் சிசு பாதுகாப்புப் பெட்டகம்" ரூ.8.07 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
8. மக்கள் தொகைக்கேற்ப 642 நகர மற்றும் கிராம துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.
நகர்மயமாக்கல் காரணமாக 10,000 மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள பகுதிகளில், மக்கள் தொகைக்கேற்ப 642 நகர மற்றும் கிராம துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.
9. உடல் உறுப்பு தானம் செய்யும் நபர்களின் தன்னலமற்ற பங்களிப்பினை அங்கீகரித்து, பாராட்டுவதற்காக அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் கௌரவச் சுவர் (Wall of Honour) நிறுவப்படும்.
10. சட்டமன்ற உறுப்பினர்களுக்கான முழு உடல் பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்படும்.
முதல் முறையாக, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுடன் ஒருங்கிணைந்து முழு உடல் பரிசோதனை செய்யப்படும்.
11. அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும். பராமரிப்பு டயாலிசிஸிக்கு உட்படும் அனைத்து நோயாளிகளுக்கும் புரதச்சத்து நிறைந்த உணவு வழங்கப்படும்.
12. நூற்றிஏழு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கூடுதல் கட்டடங்கள் ரூ.80.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள 107 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் விரிவான ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்கும் பொருட்டு, ரூ.80.25 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும்.
13. மதுரை அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரிக்கு புதிய இடத்தில் ரூ.70 கோடி செலவில் கட்டடங்கள் கட்டப்படும்.
மதுரை-திருமங்கலத்தில் உள்ள அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரிக்கு புதிய இடத்தில், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம் கோ.புதுப்பட்டி கிராமத்தில் புதிய கட்டடங்கள் ரூ.70 கோடி செலவில் கட்டப்படும்.
14. நான்கு அரசு மருத்துவமனைகளில் புதிய அதிநவீன PET சி.டி.ஸ்கேன் (PET CT Scan) சேவைகள் வழங்கப்படும்.
கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் திருச்சி, விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய மூன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைகளில், அரசு மற்றும் தனியார் பங்களிப்பு மூலம் புதிய அதிநவீன PET சி.டி.ஸ்கேன் (Positron Emission Tomography CT Scan) சேவைகள் வழங்கப்படும்.
15. 84 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வட்டார பொது சுகாதார அலகுகளுக்கான புதிய கட்டடங்கள் ரூ.54.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்
16. 25 அரசு மருத்துவக் கல்லூரிகளின் விடுதிகள் ரூ.50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர், சேலம், கடலூர் உட்பட 25 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகள் ரூ.50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
17. இரண்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு புற்றுநோய்க்கான லீனியர் அக்ஸிலேட்டர் (LINAC) மற்றும் சி.டி.சிமுலேட்டர் (C.T.Simulator) ரூ.54 கோடி செலவில் வழங்கப்படும்.
இராமநாதபுரம் மற்றும் கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு புற்றுநோய்க்கான சிகிச்சை சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் ஏழை எளிய மக்களுக்கு உயர்தர புற்றுநோய் சிகிச்சைக்கான அதிநவீன கதிர்வீச்சு சிகிச்சை வழங்குவதற்கு லீனியர் அக்ஸிலேட்டர் (LINAC) மற்றும் சிடி சிமுலேட்டர் (CT Simulator) வசதிகள் ரூ.54 கோடி செலவில் வழங்கப்படும்.
18. ஐந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புதிய அதிநவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் (MRI Scan) கருவிகள் ரூ.42.5 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் பொருட்டு, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, தருமபுரி, தூத்துக்குடி ஆகிய ஐந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புதிய அதிநவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் (MRI Scan) கருவிகள் ரூ.42.5 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
19. தமிழ்நாட்டில் ரூ.29.67 கோடி செலவில் மருத்துவ சாதனங்கள் (A மற்றும் B வகைகள்) சோதனைக் கூடம் கோயம்புத்தூரில் நிறுவப்படும்.
20. ஓமந்தூரார், தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் உதகமண்டலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இருதய உள்ளூடுருவி கதிரியக்க ஆய்வகங்கள் (Cathlab) ரூ.15 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
21. 87 புதிய அவசரகால ஊர்திகள் (BLS), 38 இலவச அமரர் ஊர்திகள், 38 புதிய உறைவிப்பான் பெட்டிகள் ஆகியன ரூ.26.71 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
22. பத்து அரசு மருத்துவமனைகளில் புதிய அதிநவீன சி.டி.ஸ்கேன் (CT Scan) கருவிகள் ரூ.25 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, திருச்சி, மதுரை, செங்கல்பட்டு, சிவகங்கை, திருவள்ளூர் ஆகிய ஆறு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் பட்டுக்கோட்டை, மேட்டூர், மணப்பாறை, பொள்ளாச்சி ஆகிய நான்கு அரசு மருத்துவமனைகளில் புதிய அதிநவீன சி.டி.ஸ்கேன் (CT Scan) கருவிகள் ரூ.25 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
23. அரசு மருத்துவமனைகளுக்கு “காயகல்ப் (Kayakalp)” திட்டத்தின் கீழ் விருது அளிக்கப்பட்டு ரூ.25 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும்.
24. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மருத்துவக் கல்லூரிகளில் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையங்கள் ரூ.25 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
25. மதுரை இராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக் கட்டடத்தில் கூடுதலாக மூன்று தளங்கள் ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
26. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 7 நாள் வண்ணக் குறியீடு கொண்ட படுக்கை விரிப்புகள் வழங்கப்படும்.
27. விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவிற்கு 100 படுக்கைகள் கொண்ட கூடுதல் தளங்கள் ரூ.12 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
28. காரைக்குடி மற்றும் நாங்குநேரி அரசு மருத்துவமனைகளில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.
சிவகங்கை மாவட்டம் - காரைக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டம் - நாங்குநேரி ஆகிய 2 அரசு மருத்துவமனைகளில் தலா ரூ.9 கோடி வீதம் மொத்தம் ரூ.18 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.
29. திருவாரூர் மாவட்டம் - திருத்துறைப்பூண்டி, திருவண்ணாமலை மாவட்டம் - போளூரில் உள்ள ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு (CEmONC) மையங்களுக்கு மொத்தம் ரூ.12 கோடி மதிப்பீட்டில் தாய்சேய் நலப் பிரிவுகள் கட்டப்படும்.
30.கடலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள சுகாதார செவிலியருக்கான பயிற்சிப் பள்ளிக்கு புதிய விடுதிக் கட்டடம் ரூ.8.58 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
31. இருபத்து நான்கு அரசு மருத்துவமனைகளுக்கு புதிய டிஜிட்டல் ஊடுகதிர் (Digital X-ray) கருவிகள் ரூ.16.68 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
கீழ்ப்பாக்கம், செங்கல்பட்டு, மதுரை உட்பட 16 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் ஈரோடு, தென்காசி, கோவில்பட்டி, கும்பகோணம் உட்பட 8 அரசு மருத்துவமனைகள் ஆக மொத்தம் 24 அரசு மருத்துவமனைகளுக்கு புதிய டிஜிட்டல் ஊடுகதிர் (Digital X-ray) கருவிகள் ரூ.16.68 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
32. மக்களைத் தேடி ஆய்வக சேவைத் திட்டத்தின் கீழ், ரூ.15.43 கோடி மதிப்பீட்டில் உயர்தர ஆய்வக உபகரணங்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்.
33. உயர் மருத்துவ சேவைகள் வழங்க 862 மருத்துவ முகாம்கள் ரூ.12.78 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
862 மருத்துவ முகாம்கள் மூலம் மக்களுக்கு உயர் மருத்துவ சேவைகள் ரூ.12.78 கோடி செலவில் வழங்கப்படும். இதனால், மக்களுக்கு உயர் மருத்துவ சேவைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்வு உறுதி செய்யப்படும்.
34. தமிழ்நாட்டில் வளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க சோமாட்ரோகான் (Somatrogon) மருந்து ரூ.13.28 கோடி செலவில் வழங்கப்படும்.
35. மக்களைத் தேடி ஆய்வக சேவைத் திட்டத்தின் கீழ், அனைத்து அரசு ஆய்வகங்களுக்கும் தேவையான வேதிப்பொருட்கள் ரூ.252.66 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
36. அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, கோட்டார், நாகர்கோவிலில் 30 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவு ரூ.11.40 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரியில் ஏற்கனவே 100 படுக்கைகள் கொண்ட பகுதி செயல்பட்டு வருகின்ற நிலையில், கூடுதலாக 30 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகளின் பிரிவு ரூ.11.40 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
37. நான்கு ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு (CEmONC) மையங்களுக்கு அவசரகால சிகிச்சைகளுக்கான மருத்துவ உபகரணங்கள் ரூ.10 கோடி செலவில் வழங்கப்படும்.
அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனை, அரசு RSRM மருத்துவமனை ஆகிய இரு மருத்துவமனைகளுக்கு தலா ரூ.3 கோடி செலவிலும் மற்றும் பென்னாகரம், மணப்பாறை ஆகிய 2 அரசு மருத்துவமனைகளுக்கு தலா ரூ.2 கோடி வீதம் ஆக மொத்தம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு (CEmONC) மையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்.
38. கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் கூடுதல் சிறப்பு மருத்துவப் பிரிவுகள்.
39. கணினிமயமாக்கப்பட்ட வசதிகளுடன் கூடிய ஊடுகதிர் (Computed Radiography X-ray) கருவிகள் 40 அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.8.91 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
ஆத்தூர், சிதம்பரம், திருச்செந்தூர், பட்டுக்கோட்டை, ஊத்தங்கரை, திருமங்கலம், சிவகாசி உட்பட 40 அரசு மருத்துவமனைகளுக்கு கணினிமயமாக்கப்பட்ட வசதிகளுடன் கூடிய ஊடுகதிர் (Computed Radiography X-ray) கருவிகள் ரூ.8.91 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
40. சேலம் உணவுப் பகுப்பாய்வகத்தில் ரூ.8.73 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் மற்றும் நுண்ணுயிரியல் ஆய்வகப் பிரிவு அமைக்கப்படும்.
41. அரசு மருத்துவமனைகளுக்கு நீராவி சலவை மற்றும் மத்திய நுண்கிருமி நீக்கும் நிலையங்கள் (CSSD) ரூ.18.25 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
42. தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் உள்ள விளையாட்டு மருத்துவம் மற்றும் ஆர்த்ரோஸ்கோபி துறை (Department of Sports Medicine and Arthroscopy), ரூ.7.77 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
43. தமிழ்நாட்டில் பச்சிளம் குழந்தை இறப்புகளைக் குறைப்பதற்காக 84 சிறப்பு பச்சிளம் குழந்தைப் பராமரிப்புப் பிரிவுகளுக்கு (SNCU) உயிர்காக்கும் அதிநவீன உபகரணங்கள் ரூ.7.49 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
44. ரூ.7 கோடி செலவில் புதிதாக 100 யோகா மற்றும் இயற்கை மருத்துவ நலவாழ்வு மையங்கள் அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் உள்ள 100 அரசு மருத்துவமனைகளில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ நலவாழ்வு மையங்கள் ரூ.7 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.
45. மக்களைத் தேடி ஆய்வக சேவைத் திட்டத்தின் கீழ், 400 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான ஆய்வக உபகரணங்கள் ரூ.7.28 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
46. எழுநூறு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களுக்கு தேசிய தரச்சான்று (NQAS) பெறப்படும்.
47. எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய, 50 கையடக்க ஊடுகதிர் கருவிகள் (HAND-HELD X-RAY DEVICE) ரூ.6 கோடி செலவில் அனைத்து சுகாதார மாவட்டங்களுக்கும் (HUD) வழங்கப்படும்.
48. நான்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அதிநவீன மருந்தியல் பரிசோதனை ஆய்வகம் ரூ.6 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
சென்னை, தஞ்சாவூர், மதுரை, கோயம்புத்தூர் ஆகிய 4 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், அதிநவீன மருந்தியல் (Pharmocology) பரிசோதனை ஆய்வகம் ரூ.6 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
49. பத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் உள்ள இந்திய மருத்துவமுறை பிரிவுகள் ரூ.5.55 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
50. மூன்று அரசு மருத்துவமனைகளில் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன்னெடுப்பு (TAEI) மையங்கள் ரூ.5.27 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
சிவகாசி, ஆரணி, உத்திரமேரூர் ஆகிய 3 அரசு மருத்துவமனைகள் TAEI மையங்களாக ரூ.5.27 கோடி செலவில் மேம்படுத்தப்படும். இதன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள TAEI மையங்களின் எண்ணிக்கை 113 ஆக உயரும்.
51. இருபது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இயங்கி வரும் இந்தியமுறை மருத்துவப் பிரிவுகளுக்கு புதிய கட்டடங்கள் ரூ.4.66 கோடி செலவில் கட்டப்படும்.
52. திருநெல்வேலி - பாளையங்கோட்டை மற்றும் மதுரை உணவுப் பகுப்பாய்வகங்களில் ரூ.8.2 கோடி மதிப்பீட்டில் புதிய நுண்ணுயிரியல் ஆய்வகப் பிரிவுகள் அமைக்கப்படும்.
53. நூற்றி எட்டு வட்டாரங்களில் தீவிர தொழுநோய் கண்டறியும் முகாம்கள் ரூ.4.10 கோடி மதிப்பீட்டில் நடத்தப்படும்.
54. நான்கு அரசு மருத்துவமனைகளுக்கு நவீன சமையல் கூடங்கள் ரூ.4.00 கோடி செலவில் அமைக்கப்படும்.
கடலூர், ஈரோடு, மன்னார்குடி, உடுமலைப்பேட்டை ஆகிய 4 அரசு மருத்துவமனைகளில் ரூ.4.00 கோடி செலவில் நவீன சமையல் கூடங்கள் அமைக்கப்படும்.
55. அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.3.90 கோடி செலவில் கூடுதல் தளம் கட்டப்படும்.
56. விபத்து மற்றும் அவசரகால சிகிச்சைகளை மேற்கொள்ள 10 அரசு மருத்துவமனைகளுக்கு சி-ஆர்ம் கருவிகள் ரூ.3.3 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
57. சிறுநீரக செயலிழப்பு தடுப்பு சிகிச்சைக்காக 50 இரத்த சுத்திகரிப்புக் (Hemodialysis) கருவிகள் ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவமனைகளில் நிறுவப்படும்.
58. சென்னை - அரசு யுனானி மருத்துவக் கல்லூரியை மேம்படுத்த ரூ.3.15 கோடி செலவிடப்படும்.
59. பள்ளி மாணவர்கள் மூலம் ஒரு கோடி குடும்பங்களில் நோய்த் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாபெரும் திட்டம்.
அனைத்துப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் படிக்கும் மாணவர்களுக்கு உடல் நலம் சம்பந்தமான விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்விழிப்புணர்வுத் தகவல்கள் RBSK திட்டம் மூலம், மாணவர்களுக்கும் அவர்களின் வாயிலாக பெற்றோர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களை சென்றடையும் வகையில் செயல்படுத்தப்படும்.
60. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 25 புதிய சிறப்பு மருத்துவ புறநோயாளி சேவைகள் (Polyclinic) தொடங்கப்படும்.
61. நான்கு மாவட்டங்களில் உள்ள பச்சிளம் குழந்தைகள் நிலைப்படுத்துதல் பிரிவுகளை (NBSU) ரூ.2.5 கோடி செலவில் “சிறப்புப் பச்சிளம் குழந்தைப் பராமரிப்புப் பிரிவுகளாக“ (SNCU) மேம்படுத்தப்படும்.
கரூர், விருதுநகர், தருமபுரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் குறைப்பிரசவம் மற்றும் குறைந்த எடை கொண்ட குழந்தைகளைப் பராமரிக்கவும், ஆபத்தான அறிகுறிகளுடன் பிறந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கவும் நான்கு “பச்சிளம் குழந்தைகள் நிலைப்படுத்துதல் பிரிவுகளை” (New Born Stabilisation Unit) தலா ரூ.62.42 இலட்சம் மதிப்பீட்டில் மொத்தம் ரூ.2.5 கோடி செலவில் சிறப்புப் பச்சிளம் குழந்தைப் பராமரிப்புப் பிரிவுகளாக (Special Newborn Care Unit) மேம்படுத்தப்படும்.
62. அரசு மருத்துவமனைகளில் செயல்படும் 24 இரத்த வங்கிகளுக்கு கூடுதலாக இரத்தக் கூறு சேமிப்பு அலகுகள் ரூ.2.38 கோடி செலவில் வழங்கப்படும்.
63. தமிழ்நாட்டில் உள்ள 50 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.2.1 கோடி மதிப்பில் பல் ஊடுகதிர் (Dental X-ray) கருவிகள் வழங்கப்படும்.
64. பத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் குழந்தைகள் நலப் பிரிவு ரூ.2 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்படும்.
65. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் முழு நேர ஆராய்ச்சி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.2 கோடி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்படும்.
66. இரண்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், தாய் மற்றும் பச்சிளம் குழந்தைப் பராமரிப்புப் பிரிவுகள் (MNCU) ரூ.1.81 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.
67. தமிழ்நாட்டில் வளரிளம் பருவத்தில் அதிகமாகக் கர்ப்பங்கள் நிகழும் 24 வட்டாரங்களில் தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
68. இந்தியமுறை மருத்துவப் பிரிவில் புதிதாக 20 இடங்களில் தசைக்கூட்டு குறைபாடு சிகிச்சை பிரிவு ரூ1.8 கோடி செலவில் உருவாக்கப்படும்.
69. கருவில் வளரும் சிசுக்களுக்கு ஏற்படும் பிறவிக் குறைபாடுகளை (Congenital Anomaly) மீயொலி பரிசோதனை மூலம் கண்டறிய ரூ.1.68 கோடி செலவில் அதிநவீன ஸ்கேன் கருவிகள் (Ultra Sound Machine) 7 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்.
70. குடும்ப நல சேவைகளை வலுப்படுத்துவதற்காக, “சுய பராமரிப்புப் பெட்டகங்கள்” 8,713 துணை சுகாதார மையங்கள் மற்றும் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் வைக்கப்படும்.
71. எலும்பு, மூட்டு, தசைநார் காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஆர்த்ரோஸ்கோப் கருவிகள் இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூ.1.20 கோடி செலவில் வழங்கப்படும்.
72. தமிழ்நாடு முழுவதும் ஆரோக்கியம் மற்றும் காலநிலை மாற்றம் (One Health & Climate Change) பற்றிய தகவல் பரவல் ஏற்படுத்தப்படும்.
73. பதினொன்று புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் LED காட்சிப் பலகை ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
74. சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளுக்கு உபகரணங்கள் மற்றும் தளவாடங்கள் ரூ. 1.10 கோடி செலவில் கொள்முதல் செய்யப்படும்.
75. இராணிப்பேட்டை மற்றும் ஆத்தூர் சுகாதார மாவட்டங்களில் தடுப்பூசிக் கிடங்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
76. உணவுப் பொருட்கள் குறித்த பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள “சமூக ஊடகப் பிரிவு” (Social Media Cell) உருவாக்கப்படும்.
77. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்குப் பதிலாக மறுசுழற்சி தன்மையுள்ள மக்கும் பொருள்களை உபயோகப்படுத்தும் உணவு நிறுவனங்களை ஊக்குவிக்க பரிசுகள் வழங்கப்படும்.
78. பிளாஸ்டிக் பாட்டில்கள் / கேன்களில் குடிநீரை சேகரித்து வைத்தல் மற்றும் பயன்பாடுகள் குறித்து உணவு வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
79. மருத்துவ ஆராய்ச்சியினை ஊக்குவிப்பதற்கான குறுகியகால மாணவர் திட்டத்தினை செயல்படுத்த உதவித் தொகையாக ஆண்டிற்கு ரூ.1 கோடி வழங்கப்படும்.
80. மலைவாழ் பகுதியில் காணப்படும் சிக்கிள் செல் மற்றும் தலசீமியா நோய்களைக் கண்டறிய ஏழு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு HPLC கருவிகள் வழங்கப்படும்.
81. ஆறு மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு மையங்களில் (DEIC) "ஒருங்கிணைந்த உணர்வுத்திறன் பூங்காக்கள்" அமைக்கப்படும்.
கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருப்பூர், சென்னை - எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, ஈரோடு, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொடக்கநிலை இடையீட்டு மையங்களில் (DEIC) “ஒருங்கிணைந்த உணர்வுத்திறன் பூங்காக்கள்” (Sensory Integration Park) அமைக்கப்படும்.
82. சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இரத்தச் சுத்திகரிப்பு (Hemodialysis) சேவைகளுக்கான மின்னணு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படும்.
83. பச்சிளம் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கிடைப்பதை உறுதிப்படுத்த ஆறு அரசு மருத்துவமனைகளில் பாலூட்டும் மேலாண்மை அலகு (LMU) நிறுவப்படும்.
84. கிருஷ்ணகிரி மற்றும் திருவாரூர் மாவட்ட மக்களுக்கு கண் சிகிச்சை சேவைகளை நேரடியாக வழங்குவதற்கு நடமாடும் கண் மருத்துவ சேவை வாகனங்கள் வழங்கப்படும்.
85. நோய்களைக் கட்டுப்படுத்துவதற்காக, ஒருங்கிணைந்த நோய்கள் கண்காணிப்புத் திட்டத்தின் கீழ் (IHIP-IDSP) சுகாதார நலப் பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.
86. புதிதாக 6 இடங்களில் இந்திய மருத்துவமுறை பழங்குடி நடமாடும் மருத்துவப் பிரிவுகள் தோற்றுவிக்கப்படும்.
இந்திய மருத்துவமுறை பழங்குடி நடமாடும் மருத்துவப் பிரிவுகள் புதிதாக அருநூத்துமலை, வெள்ளிமலை ஆகிய இடங்களில் ஆயுர்வேதா பிரிவுகளும், தாளவாடி, பளியங்குடி ஆகிய இடங்களில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவுகளும், ஜவ்வாது மலையில் யுனானி பிரிவும் மற்றும் ஆனைக்கட்டியில் ஓமியோபதி பிரிவும் தோற்றுவிக்கப்படும்.
87. காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், டிஜிட்டல் ஊடுகதிர் கருவியைக் கொண்டுள்ள நடமாடும் வாகனங்களில் "செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்" (AI-Technology) நிறுவப்படும்.
88. இருதயக் கோளாறு உள்ள கர்ப்பிணித் தாய்மார்களைக் கண்டறிந்து சிகிச்சை அளித்திட 5 ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு (CEmONC) மையங்களுக்கு எக்கோ (Echo) கருவிகள் வழங்கப்படும்.
89. எட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அதிநவீன மருத்துவ நோய் பரவியியல் பிரிவுகள் நிறுவப்படும்.
சென்னை, கீழ்ப்பாக்கம், தஞ்சாவூர், திருச்சி, சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய 8 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அதிநவீன மருத்துவ நோய் பரவியியல் பிரிவுகள் (Clinical Epidemiology) நிறுவப்படும். இதன் மூலம் தொற்றுநோயியல் மற்றும் புள்ளிவிவர சேவைகள் மேம்படுத்தப்படும்.
90. மயிலாடுதுறையில் மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு மையம் (District Early Intervention Centre) அமைக்கப்படும்.
91. கருவுறுதலுக்கு முன் மற்றும் பிறப்பிற்கு முந்தைய கருவின் தன்மையறியும் தொழில்நுட்ப முறைகள் (பாலின தேர்வை தடை செய்தல்) சட்டம், 1994 செயல் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்கள் நடத்தப்படும்.
92. சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முழுமையான பல் நல பரிசோதனை (Master Dental Health Check Up) பிரிவு தொடங்கப்படும்.
93. நான்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தமிழ்நாடு மருத்துவத்தர மேம்பாட்டுக் கட்டமைப்பு பயிற்சித் (TAN-QuEST) திட்டம் விரிவுபடுத்தப்படும்.
செங்கல்பட்டு, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய 4 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தமிழ்நாடு மருத்துவத்தர மேம்பாட்டுக் கட்டமைப்பு பயிற்சித் (TAN-QuEST) திட்டம் விரிவுபடுத்தப்படும். இப்பயிற்சி முறை நோயாளிகளுக்கும் மருத்துவர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கு இடையே நல்ல புரிதல் மற்றும் தகவல் தொடர்பை உருவாக்க உதவும்.
94. மலைவாழ் பகுதியில் சிக்கிள்செல் மற்றும் தலசீமியா மரபணு சாத்தியக்கூறு (Trait) மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்க 14 மரபணு சார்ந்த ஆலோசகர்கள் நியமிக்கப்படுவர்.
95. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் எதிர்கால தேவைக்கான மனிதவள மேலாண்மைத் தொலைநோக்குத் திட்டம் (Human Resources for Health Strategy) உருவாக்கப்படும்.
96. திருச்சிராப்பள்ளி மாவட்டம் சோமரசம்பேட்டையில் இயங்கிவரும் சித்த மருந்தகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும்.
97. வளரிளம் பருவத்தினருக்கு ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத் திறன் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
98. நீடித்த நுரையீரல் அடைப்பு நோய்களுக்கான (COPD) விழிப்புணர்வு மற்றும் ஆரம்ப கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
99. கொழுப்புமிகு ஈரல் நோய் (Metabolic Dysfunction associated Steatotic Liver Disease-Previously NAFLD) குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் ஆரம்ப நிலை பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
100. ஹீமோபிலியா நோயாளிகளுக்கான மாநில அளவிலான இணைய பதிவேடு உருவாக்கப்படும்.
மாநிலத்திலுள்ள ஹீமோபிலியா நோயாளிகளின் முக்கியத் தரவுகளை ஒருங்கிணைந்த முறையில் பராமரிக்க மாநில ஹீமோபிலியா பதிவேடு உருவாக்கப்படும்.
101. தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தான இணைய முகமை உருவாக்கப்படும்.
தமிழ்நாட்டில் உடல் உறுப்பு நன்கொடையாளர் மற்றும் பெறுநர் ஆகியோரின் விண்ணப்பம் பெறுதல், விண்ணப்பங்களை செயலாக்குதல், ஆவண பதிவேற்றங்கள் மற்றும் அதன் முடிவுகளை அறிய நிகழ்நிலை இணைய முகமை உருவாக்கப்படும். இவ்விணைய முகமை ஒருங்கிணைக்கப்பட்ட, பாதுகாப்பான ஒரு களஞ்சியப் பதிவேடாக அமையும்.
102. நான்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், ஒருங்கிணைந்த சுகாதார நிபுணத்துவப் பயிற்சி மையங்கள் (IHPTC) நிறுவப்படும்.
தூத்துக்குடி, கோயம்புத்தூர், தஞ்சாவூர், வேலூர் ஆகிய 4 அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒருங்கிணைந்த சுகாதார நிபுணத்துவப் பயிற்சி மையங்கள் (The Integrated Health Professional Training Centre) ஏற்படுத்தப்படும். இது மருத்துவக் கல்விப் பிரிவுடன் இணைக்கப்பட்ட ஒரு அலகாக (unit) உருவாக்கப்படும்.
103. பத்து அரசு மருத்துவமனைகளுக்கு இ.சி.ஜி. (ECG) கருவிகள் வழங்கப்படும்.
மதுராந்தகம், சிதம்பரம், அரூர், கொடைக்கானல், சத்தியமங்கலம், பூதப்பாண்டி, தேன்கனிக்கோட்டை, சங்கரன்கோவில், கோத்தகிரி, சிவகாசி ஆகிய 10 அரசு மருத்துவமனைகளுக்கு ECG கருவிகள் வழங்கப்படும்.
104. “நடப்போம் நலம் பெறுவோம்” திட்டத்தின் கீழ் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து அனைத்து மாவட்டங்களிலும் கூடுதலாக நடைப்பயிற்சித் தடங்கள் ஏற்படுத்தப்படும்.
105. மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் வைர விழா கொண்டாடப்படும்.
மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் 1966-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு,
60 ஆண்டுகள் பெரும் தொண்டாற்றி வருகிறது. இவ்வியக்ககம் 60 ஆண்டு காலம் நிறைவு செய்வதையொட்டி வைர விழா கொண்டாடப்படும்.
106. தமிழ்நாடு நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் மேற்பார்வை வழிகாட்டு நெறிமுறைகள் விரிவாக்கம் செய்யப்படும்.
தமிழ்நாடு நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் மேற்பார்வை வழிகாட்டு நெறிமுறைகள், நோயாளிகள் விரைவாக குணமாவதற்கும், பொது சுகாதார தாக்கத்தையும், பொருளாதார தாக்கத்தையும் கட்டுக்குள் கொண்டு வருவதற்கும் வழிவகைச் செய்யும். இது மாநிலத்தின் ஒருமித்த சுகாதார முன்முயற்சியின் ஒரு பகுதியாகும்.
107. ஒருங்கிணைந்த அடுக்குமாடி புதிய நிருவாகக் கட்டடம் அமைக்கப்படும்.
மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரக வளாகத்தில் ஒருங்கிணைந்த புதிய அடுக்குமாடி நிருவாகக் கட்டடம் அமைக்கப்படும்.
108. ஐநூறு நகர்ப்புற சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்களுக்கு தடுப்பூசி சேவைகள் விரிவாக்கம் செய்யப்படும்.
109. தற்போது 15 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசித் திட்டம் மேலும் 5 மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்தப்படும்.
110. நான்காவது பொது சுகாதார சர்வதேச மாநாடு (DPHICON) நடத்தப்படும்.
நான்காவது சர்வதேச பொது சுகாதார மாநாடு இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சேலம் மாநகரில் நடத்திட ஏற்பாடு செய்யப்படும்.
111. சிறு வணிக நிறுவனத் தொழிலாளர்களைத் தேடி 'பணியிடம் சார்ந்த தொற்றா நோய்களுக்கான' பரிசோதனைகள் 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்படும்.
112. நான்கு மண்டல மருத்துவக் கல்வி தொழில்நுட்பக் கருத்தரங்குகள் நடத்தப்படும்.
மருத்துவக் கல்வி தொழில்நுட்பக் கருத்தரங்குகள் (MET Conference), மருத்துவக் கல்வி முறையில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பைப் பற்றி விவாதிக்கவும், காட்சிப்படுத்தவும் மற்றும் ஆராயவும் ஒரு தளமாக செயல்படுகிறது.
113. உணவுப் பொருட்களில் செயற்கை வண்ணங்களை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
உணவுப் பொருட்களில் அனுமதிக்கப்படாத செயற்கை உணவு வண்ணங்களைச் சேர்க்கக் கூடாது என்பது குறித்து உணவு வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
114. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் கட்டணமின்றி எச்.ஐ.வி/எய்ட்ஸ் தடுப்புப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
115. ஐம்பது கல்லூரிகளில் புதிய செஞ்சுருள் சங்கங்கள் (Red Ribbon Clubs), தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தால் ஏற்படுத்தப்படும்.
116. வாழ்வியல் திறன் கல்விப் பயிற்சி வாயிலாக பள்ளியில் பயிலும் வளரிளம் பருவத்தினரிடையே எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு மேலும் 100 பள்ளிகளில் பயிற்சி அளிக்கப்படும்.
117. தமிழ்நாட்டில் போதைத் தரக்கூடிய மருந்துகளின் நடமாட்டத்தை கண்காணிக்க பறக்கும் படைகள் உருவாக்கப்படும்.
118. தரச் சான்றிதழ்களின் அடிப்படையில், உணவு வணிகர்களைத் தேர்வு செய்வது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
உணவின் தரம் மற்றும் பாதுகாப்பு நிறைந்த உணவகத்திற்கான சுகாதார மதிப்பீடு சான்றிதழ் (Hygiene Rating), உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் மற்றும் FoSTaC பயிற்சி சான்றிதழ் பெற்ற உணவு வணிகர்களைத் தேர்வு செய்வதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!