Tamilnadu
”மருத்துவம், கல்வித்துறையில் முதன்மை மாநிலமாக விளங்கும் தமிழ்நாடு” : காலாநிதி வீராசாமி MP பெருமிதம்!
சென்னை SIMS தனியார் மருத்துவமனையில், உலக சுகாதார தினத்தை ( World Health Day ) முன்னிட்டு அரசு பால்வாடிகள் மற்றும் மழலையர் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவச சுகாதார பரிசோதனை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கலாநிதி வீராசாமி MP ”ஏப்ரல் 7 தேதி சுகாதார தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அந்த விதத்தில் 2025 இந்த ஆண்டிற்கான (Healthy Beginnings, Hopeful Futures) என்ற இந்த ஆண்டு கருப்பொருளின் அடிப்படையில் தற்போது செயல்பட்டு வருகிறோம் .
அந்த விதத்தில் சிம்ஸ் மருத்துவமனை இன்று பத்தாயிரம் குழந்தைகளுக்கு நோய்கள் இருக்கிறதா? இல்லையா? என கண்டறிந்து அவர்களுக்கு சிறந்த மருத்துவம் கொடுப்பது, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கீனிங் செய்து அவர்களுக்கு தேவையான உதவிகளை இந்த ஆண்டு முழுவதும் செய்து இருக்கிறார்கள்.
தமிழ்நாடு மருத்துவத்துறையில் மட்டுமல்லாமல் கல்வித்துறையிலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. தொடர்ந்து ஐம்பது ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்கள் எடுத்த முயற்சி காரணமாக இந்த நிலை அடைந்திருக்கிறோம்.
குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கல்வியும், சுகாதாரமும் இரு கண்கள் என செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் இரண்டு துறைகளிலும் மகத்தான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அதில் சிறப்பான திட்டமாக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!