அரசியல்

40 வழக்கில் மட்டுமே தண்டனை- "அமலாக்கத்துறை மீது மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது" - உச்சநீதிமன்ற நீதிபதி!

40 வழக்கில் மட்டுமே தண்டனை- "அமலாக்கத்துறை மீது மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது" - உச்சநீதிமன்ற நீதிபதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜால் பூயான் புத்த வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்று கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "2014 முதல் 2024 வரை அமலாக்கத்துறை 5,300 வழக்குகளை பதிவு செய்துள்ளது. அதில் 40 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "அமலாக்கத்துறை வழக்கு விசாரணைகளில் அதிக தாமதம் ஏற்படுகிறது. தண்டனை சதவீதம் குறைவாகவே உள்ளது. எனவேதான் பெயில் என்பது உரிமை. ஜெயில் என்பது விதிவிலக்கு என்று உச்ச நீதிமன்றம் கூறி பலருக்கு ஜாமின் வழங்கி வருகிறது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

40 வழக்கில் மட்டுமே தண்டனை- "அமலாக்கத்துறை மீது மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது" - உச்சநீதிமன்ற நீதிபதி!

வழக்கு ஒன்றில் ஒருவரை காலை 10.30 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வரவழைத்த அதிகாரிகள் இரவு வரை காக்க வைத்துள்ளனர். அதன் பின்னர் 3.30மணி வரை விசாரணை நடத்தி காலை 5.30 மணிக்கு கைது செய்துள்ளனர். இந்த வழக்கை நாங்கள் ரத்து செய்து உத்தரவிட்டோம்.

இந்த தீர்ப்புக்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் அலுவலக நேரத்தில் மட்டுமே விசாரணை நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளனர். அமலாக்கத்துறை மீது மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.தண்டனை எண்ணிக்கை அதிகமானால் மட்டுமே அமலாக்கத்துறை மீதான மக்களின் சந்தேக பார்வை குறையும்" என்று தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories