Tamilnadu
“சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் உட்கட்டமைப்பிற்கு ரூ.2.50 கோடி நிதி!” : துணை முதலமைச்சர் அறிவிப்பு!
சென்னை பத்திரிகையாளர் மன்றம், இந்தியன் ஆயில் இணைந்து நடத்திய பத்திரிகையாளர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிக்கும் விழா சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.
அப்போது, விழா மேடையில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஸ்டாலின், “ஒரு பத்திரிகையின் பதிப்பாளர் என்கிற அடிப்படையில் பத்திரிகையாளர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது பெருமைக்குரியதாய் அமைந்துள்ளது.
திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு, அதன் மூலமாக 11 லட்சம் ரூபாய் இதுவரை வழங்கியிருக்கின்றோம். பத்திரிகையாளர் ஓய்வூதியத்தை ரூ.12,000ஆக உயர்த்தியுள்ளோம், பத்திரிகையாளர் குடும்ப ஓய்வூதியம் 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாக உயர்த்தி கொடுத்து வருகிறோம்.
கொரோனா நேரத்தில் உயிரிழந்த பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு, மொத்தமாக 2.40 கோடி ரூபாய் இழப்பீடாக கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணி செய்த சுமார் 6,000 பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக, சுமார் 2.89 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இவை தவிர, கட்டணமில்லா பேருந்து பயணம், செய்தியாளர் அங்கீகார அட்டை போன்ற ஏராளமான திட்டங்களை அரசு சார்பாக, பத்திரிகையாளர்களுக்கு வழங்கி வருகிறோம்.
அவ்வகையில், தற்போது பத்திரிகையாளர் மன்றத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, அரசு சார்பாக 2 கோடி 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, இங்கு அறிவிக்கின்றேன்” என்றார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!