Tamilnadu

இனி இவர்களுக்கும் ரூ.1000 : முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிதியமைச்சர் தங்கம் தென்னரசு!

இந்தாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.

இக்கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். அதில் இடம் பெற்ற சில முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-

1. விடியல் பயணம் திட்டத்திற்கு ரூ.3600 கோடி நிதி ஒதுக்கீடு.

2. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ரூ.13,807 கோடி நிதி ஒதுக்கீடு.

3. மகளிர் உரிமைத் தொகை பெற்றிடாத தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள் விண்ணப்பித்திட உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும்.

4. புதுமைப் பெண் திட்டத்திற்கு ரூ.420 கோடி நிதி ஒதுக்கீடு.

5. புதியதாக 10,000 சுயஉதவிக்குழுக்கள் உருவாக்கம். ரூ.37,000 கோடி அளவிற்கு வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

6. காஞ்சிபுரம், ஈரோடு, கரூர், இரணிப்பேட்டை உள்ளிட்ட மேலும் 10 இடங்களில் ரூ.77 கோடியில் தோழி விடுதிகள் கட்டப்படும்.

7. சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகரங்களில் தலா 1000 மாணவிகள் தங்கும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும்.

8. மூன்றாம் பாலினத்தவருக்கும் புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

9. முதற்கட்டமாக 50 மூன்றாம் பாலினத்தவர்களை ஊர்காவல் படையில் ஈடுபடுத்தப்படும். இவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டு சென்னை, தாம்பரம், ஆவடி மாநகரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

10. 25 அன்புச்சோலை அமையங்கள் ரூ.10 கோடியில் அமைக்கப்படும்.

Also Read: 2025 - 26 நிதிநிலை அறிக்கை : சென்னைக்கான அறிவிப்புகள் என்ன?