Tamilnadu
தமிழ்நாடு பட்ஜெட் நாளை தாக்கல் : முக்கிய அறிவிப்புகள் என்ன இருக்கும்?
இந்தாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இக்கூட்டத் தொடரின் முதல் நாள் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு, பொருளாதார ஆய்வறிக்கையை தமிழ்நாடு அரசு முதல்முறையாக தாக்கல் செய்ய உள்ளது. பொருளாதார ஆய்வறிக்கையில் அரசின் நிதிநிலை, உள்நாட்டு உற்பத்தி, செயல்படுத்தி வரும் திட்டங்களின் நிலை, வரும் ஆண்டுகளில் மாநில நிதிநிலை எப்படி இருக்கும் என்பன உள்ளிட்ட பல்வேறு தரவுகள் இடம்பெறவுள்ளன.
நாளை மறுநாள் வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். 2025-2026-ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் மற்றும் 2024-2025-ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் மார்ச் 21-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும்.
இதனிடையே, தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கையை,சென்னை மாநகராட்சி பகுதிகளில் 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிதி நிலை அறிக்கையை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட சென்ட்ரல் ரயில் நிலையம், முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் டவர் பூங்கா, கோயம்பேடு பேருந்து நிலையம், மெரினா கடற்கரை,
பாண்டிபஜார் சாலை, கத்திப்பாரா பூங்கா, பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை உள்ளிட்ட 100 இடங்களில் எல்.இ.டி. திரை மூலம் காலை 9.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மேலும், வரும் 15-ம் தேதி சனிக்கிழமை காலை 9.30 மணிமுதல் வேளாண் நிதி நிலை அறிக்கையும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!