Tamilnadu
குட்டையில் மூழ்கிய மாணவரை காப்பாற்ற முயன்று பலியான தலைமையாசிரியர் - முதலமைச்சர் இரங்கல் !
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வட்டம், எழுவப்பள்ளி கிராமத்திலுள்ள பண்ணைக் குட்டையில் மூழ்கி உயிரிழந்த மாணவன் மற்றும் தலைமையாசிரியர் ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இது குறித்து வெளியான அறிவிப்பில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், எழுவப்பள்ளி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்றுவந்த மாணவன் நித்தின் (வயது 8) த/பெ. மணிகண்டன் என்பவர் இன்று (5.03.2025) பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் பள்ளிக்கு அருகிலுள்ள தனியருக்குச் சொந்தமான பண்ணைக் குட்டையில் தவறி விழுந்த நிலையில் மாணவனைக் காப்பாற்ற முயன்ற பள்ளியின் தலைமையாசிரியர் திரு.கெளரிசங்கர் (வயது 53) ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்."
இச்சம்பவத்தில், உயிரிழந்த பள்ளி மாணவன் நித்தின் மற்றும் தலைமையாசிரியர் திரு.கௌரிசங்கர் ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்"என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
“பாஜகவின் ஊதுகுழலாக மாறிவிட்டார் எடப்பாடி பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
“’சமூகநீதி விடுதிகள்’ - சமூகநீதிப் பயணத்தில் இது முக்கிய மைல் கல்!”: முதலமைச்சருக்கு முரசொலி பாராட்டு!
-
5 கி.மீ தூரம் நடைபயணம் : தமிழ் வெல்லும்' - கலைஞர் சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!