Tamilnadu
”திராவிடர் நீதி நூல் திருக்குறள்” : தமிழச்சி தங்கபாண்டியன் MP பேச்சு!
சென்னை, குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் உள்ள ஜெயின் பப்ளிக் என்ற தனியார் சி.பி.எஸ்.இ பள்ளியில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்டுள்ள திருவள்ளூவர் சிலையை தமிழச்சி தங்கபாண்டியன் MP திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன் MP ”ஒவ்வொரு திராவிடர் கையிலும் இருக்க வேண்டிய நூல் திருக்குறள். திராவிடர் நீதி திருக்குறள் என்று சொன்னவர் பெரியார்.
ஒவ்வொரு நாளும் திருக்குறளையும், திருவள்ளுவரையும் நாம் நினைத்து பார்க்க வேண்டும். திருவள்ளுவர் சிலையை நிறுவியதோடு தந்தை பெரியாரையும் அவரது புகழையும் பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளவதற்கு வழிவகை செய்துள்ள பள்ளி நிர்வாகத்திற்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திருக்குறள்களை இசையமைத்து பாடலாக பாடிய மாணவர்களுக்கும் எனது பாராட்டுகள்” என தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசின் இந்தி திணிப்புக்கு, தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சிபிஎஸ்சி பள்ளியில் தமிழ் எழுத்துக்களால் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
Also Read
-
“த.வெ.க பொறுக்கிகளால் பெண் போலீசாருக்கே பாதுகாப்பில்லை” : தி.மு.க IT Wing கண்டனம்!
-
அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சபாநாயகரிடம் தி.மு.க கடிதம்!
-
“தி.மு.க முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது!” : கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!
-
“பேரறிஞர் அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார்! வாழ்க அண்ணாவின் புகழ்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுங்கள்! - முரசொலி தலையங்கம்!