Tamilnadu

அடுத்த 4 நாட்களுக்கு அதிகரிக்கும் வெப்பம் : வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட பொது சுகாதாரத் துறை !

வானிலை ஆய்வு மைய தகவலின் படி தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே பொதுமக்கள் அதற்கு ஏற்றார் போல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் பொது சுகாதாரத் துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் :

  • பொதுமக்கள் அதிகமாக தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும்

  • பயணம் செய்யும்போது தண்ணீர் பாட்டில் உடன் வைத்துக் கொள்ள வேண்டும்

  • ஒ.ஆர்.எஸ் கரைசல் வைத்து அவ்வப்போது பருக வேண்டும்

  • தர்பூசணி, ஆரஞ்சு பழம், கிரேப் உள்ளிட்ட பழங்களைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்

  • வெளியில் செல்லும்போது குடை மற்றும் தொப்பி ஆகியவை அணிய வேண்டும்

  • முடிந்தவரை வெளியே செல்லாமல் வீட்டில் இருப்பது நல்லதாகும்

  • குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் உடல் உபாதைகள் நபர்கள் இதய நோய் உள்ள நபர்கள் வெப்பம் தொடர்பான உடல் உபாயங்கள் ஏற்படும். எனவே அவர்கள் பகல் நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்

  • குறிப்பாக பிற்பகல் 12 மணியிலிருந்து மூன்று மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்

  • மதுபானம் டீ காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்

  • நிறுத்திய வாகனத்தில் குழந்தைகள், வளர்ப்பு பிராணிகளை விட்டு செல்வதை தவிர்க்க வேண்டும்

  • வெப்பம் காரணமாக மயக்கம் அடைந்தால் உடனடியாக 108க்கு அழைக்க வேண்டும்

Also Read: “முதல்வர் மருந்தகம்” திட்டம் : 8 நாட்களில் 50,053 பேர் பயனடைந்ததாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு !