Tamilnadu
4 மணி நேரம் : உடன்பிறப்புகளிடம் வாழ்த்து பெற்றுவரும் திராவிட நாயகர்!
திராவிட நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தனது 72 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது இந்தி திணைப்பை எதிர்ப்போம்,மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி.. அணணா வழியில் அயராது உழைப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழங்கினார். பின்னர் நினைவிடத்தில் பணியாற்றக்கூடிய 105 ஊழியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அண்ணா அறிவாலயம் வருகை தந்து கழக தொண்டர்களின் வாழ்த்துக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்று வருகிறார். நீண்ட வரிசையில் நின்று கழக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், பொதுமக்கள் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சருக்கு புத்தகம், பழங்கள், இனிப்புகள்,வெள்ளி வாள் உள்ளிட்டவற்றை நினைவு பரிசாக கழக தொண்டர்கள் வழங்கி வருகின்றனர். திருவண்ணாமலையை சேர்ந்த கழக தொண்டர்கள் 250 கிலோ எடைக்கொண்ட பித்தளையில் ஆனா சிங்கம் சிலை முதலமைச்சருக்கு பிறந்த நாள் பரிசாக வழங்கினர். கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளின் வாழ்த்துக்களை 4 மணி நேரத்திற்குமேலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுவருகிறார்.
Also Read
-
”3 ஃபைலை திறந்து பாருங்கள்.. உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயப்பட மாட்டோம்” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“மடைமாற்றும் அரசு.. அமைச்சர் மரிய வில்சனை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் : அன்பில் மகேஸ் அதிரடி!
-
“தவெக அரசால் பரந்தூர் விமான நிலையத்திட்டம் ரத்து.. தமிழ்நாட்டிற்கு கறுப்பு நாள்”: டி.ஆர்.பி.ராஜா காட்டம்!
-
“பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!” : உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
ஒரு திட்டம் நாட்டிற்காக வரும்போது, அரசியல் செய்யக்கூடாது : விஜய் அறிவிப்புக்கு தங்கம் தென்னரசு எதிர்ப்பு!