Tamilnadu
தமிழ்நாட்டின் காலனி உற்பத்தி துறைக்கு பொருளாதார ஆய்வறிக்கை அங்கீகாரம்- அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!
தமிழ்நாடு அரசின் முதலீட்டு முகமையான Guidance அமைப்பு, பல முதலீடுகளை திறம்பட ஈர்த்து வருவதாக ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும், காலணி தயாரிப்புத்துறையில் Guidance அமைப்பு தைவான் நாட்டு நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருப்பதாகவும் முதலீட்டாளர்கள் விரும்பும் இடமாக தமிழ்நாடு ஆகியிருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் காலனி உற்பத்தி துறைக்கு ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை அங்கீகாரம் அளித்துள்ளது பெருமைக்குரிய தருணம் என தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.
இது குறித்துப் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், "இந்தியாவின் காலணி மற்றும் தோல் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு ஈடு இணையற்றது. நாட்டின் காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியில் 38 சதவீதம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது.இந்த துறை 2 லட்சத்திற்கும் அதிகமான வேலைகளை உருவாக்குகிறது . 80 முதல் 90 சதவீத வேலைகள் தோல் அல்லாத காலணி துறையில் உருவாக்கப்படுகின்றன .
தமிழ்நாட்டின் முற்போக்கான கொள்கைகள் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் விநியோகிக்கப்பட்ட வளர்ச்சியை உறுதி செய்கிறது என்பதையே ஒன்றிய அரசின் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. முதலமைச்சரின் சீரிய முயற்சியால் நைக், பூமா, அடிடாஸ் மற்றும் பல்வேறு உலக காலணி உற்பத்தி நிறுவனங்களுக்கு விருப்பமான இடமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது" என்று கூறியுள்ளார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!