Tamilnadu
திருச்செந்தூர் To இராமேஸ்வரம்.. தமிழ்நாடு அரசு சார்பில் 3 நாட்கள் ஆன்மிக சுற்றுலா - விவரம்!
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் (TTDC) மூலம் 3 நாட்கள் திருச்செந்தூர், இராமேஸ்வரம், சுற்றுலா சென்னை வாலாஜா சாலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக சுற்றுலா வளாகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர், உத்திரகோசமங்கை மற்றும் இராமேஸ்வரம், சென்று திங்கட்கிழமை காலை சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும்.
மேற்கண்ட சிறப்பு ஆன்மிக சுற்றுலாவில் முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் அமைந்து இருக்கும் திரு செந்தில் ஆண்டவர் திருக்கோவிலில் சிறப்பு தரிசனம்.
உலகிலேயே முதலில் தோன்றிய முதல் கோவில் இராமநாதபுரத்தில் அமைந்து இருக்கும் உத்திரகோசமங்கை, மங்களநாதர் கோவிலில் சிறப்பு தரிசனம் .
தென்னிந்தியாவின் காசி என அழைக்கப்படும் இராமேஸ்வரத்தில் அமைந்துள்ள இராமநாத சுவாமி திருக்கோவிலில் சிறப்பு தரிசனம் இக்கோவிலில் 22 தீர்த்தங்கள் இதன் சிறப்பு அம்சம் ஆகும். மேலும் இச்சுற்றுலாவில் தனுஷ்கோடியினை சிறப்பு பார்வையிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆன்மிகப் பயணத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தங்கும் விடுதிகளில் ஆன்மிக சுற்றுலா பயணிகளுக்கு தங்கும் வசதிகள் மற்றும் 3 வேளை உணவும் வழங்கப்படும்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத் திட்டங்களுக்கு முன்பதிவு செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் www.ttdconline.com இணையதள பக்கத்திலும், அல்லது சென்னை வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேரடியாகவும் முன்பதிவு செய்யலாம்.
மேலும் கூடுதல் விவரங்களை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தொலைபேசி எண்களை (180042531111) (Toll Free). 044-25333333 மற்றும் 044-25333444 தொடர்பு கொண்டு பெறலாம்.
Also Read
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!
-
”பாலம் சிறப்பானது ; பெயர் அதனினும் சிறப்பானது” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
"அரசு அலுவலர்கள் சிறப்பாக செயல்பட்டால்தான் அரசின் திட்டங்கள் மக்களை சேரும்" - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் போட்டிகள்... யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!